கடலோர காவல் படையில் வேலை.. ஆரம்பமே 56 ஆயிரம் சம்பளம்! டிகிரி முடிச்சிருக்கீங்களா? செம சான்ஸ்
சென்னை: இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்பமே மாதம் ரூ.56 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் இந்த பணியிடங்களுக்கு என்ஜினியரிங் அல்லது டிகிடி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவின் கடல் வளங்களைப் பாதுகாக்கும் வகையில் 1978 ஆம் ஆண்டு இந்திய கடலோர காவல் படை உருவாக்கப்பட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கடலோர காவல் படையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்படுகின்றன. அந்த வகையில் தற்பொது, இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள 140 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு என்ன? ஆகிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: அசிஸ்டண்ட் கமாண்டண்ட் மொத்தம் 140 பணியிடங்கள் ( பொது பணி, டெக்னிக்கல் & என்ஜினியரிங், எலக்ட்ரிகல் / எலக்ட்ரானிக்ஸ்) உள்ளன. இதில், பொதுப்பணி (ஜிடி) - 110 பணியிடங்களும், டெக்னிக்கல் பிரிவில் 30 பணியிடங்களும் உள்ளன.
கல்வி தகுதி: ஜிடி எனப்படும் பொதுப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடப்பிரிவு எடுத்து படித்து இருக்க வேண்டும். பட்டப்படிப்புக்கு நிகரான டிப்ளமோ படித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
டெக்னிக்கல் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் என்ஜினியரிங் முடித்து இருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரிக்கல் அல்லது டெலி கம்யூனிகேஷன் அல்லது அதற்கு நிகரான பாடப்பிரிவுகளை எடுத்து படித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு: மேற்கண்ட இரண்டு பணியிடங்களுக்குமே 21 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் 01.07.2000 ஆம் ஆண்டுக்கு பிறகும் 30.06.2024 ஆம் ஆண்டுக்கு முன்பாகவும் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப சம்பளமே ரூ.56,100 வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை கடலோர காவல் படையின் பொது நுழைவுத்தேர்வு (CGCAT), ஸ்டேஜ் 2 முதன்மை செலக்சன் போர்டு (பிஎஸ்பி), ஸ்டேஜ் 3 இறுதி செலக்சன் போர்டு, ஸ்டேஜ் 4 மெடிக்கல் தேர்வு, ஸ்டேஜ் 5 induction என 5 கட்ட தேர்வு நடைமுறைகளுக்குப் பிறகு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?: தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வு மையங்களை பொறுத்தவரை நொய்டா, மும்பை / கோவா, சென்னை, கொல்கத்தா, ஷில்லாங் மற்றும் காந்தி நகர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.
தேர்வுக்கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்டி/ எஸ்.சி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. கடலோர காவல்படை இணையதளத்தில் (https://joinindiancoastguard.cdac.in/) தேவையான விவரங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் வழியிலேயே கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 05.12.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.12.2024
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வர்கள் https://joinindiancoastguard.cdac.in/cgcat/- என்ற இணையதளத்தில் தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்து கொள்ளவும்.












Click it and Unblock the Notifications