டைப்பிங் தெரிந்தாலே போதும்.. மாதம் ரூ.81,100 வரை சம்பளம்! பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலை
சென்னை: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் டைப்பிஸ்ட் மற்றும் ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் மாதம் ரூ.19,900 முதல் ரூ.81,100 சம்பளத்தில் நிரப்பப்பட உள்ளது.
டெல்லியில் இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. உலகில் உள்ள மிப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இது பெயர் எடுத்துள்ளது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள்: இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக்கழகத்தில் ஜூனியர் அசிஸ்டென்ட் -கம் டைப்பிஸ்ட் (ஜேஏடி) பணிக்கு 50 பேர், ஸ்டெனோகிராபர் பணிக்கு 52 பேர் என மொத்தம் 102 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: ஜூனியர் அசிஸ்டென்ட் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 18 வயது முதல் 27 வயதுக்குள்ளும், ஸ்டெனோகிராபர் பணிக்கு 18 வயது முதல் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது வரையும் தளர்வு என்பது வழங்கப்படும்.
கல்வி தகுதி: ஜுனியர் அசிஸ்டென்ட் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 10, பிளஸ் 2, முடித்து கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 40 வார்த்தைகளும், இந்தியில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகளும் டைப் செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும். ஸ்டெனோகிராபர் பணிக்கு மேற்கூறிய தகுதியுடன் ஷார்ட்ஹேன்ட் பிரிவில் நிமிடத்துக்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும் கொண்டிருக்க வேண்டும். 10, பிளஸ் 2யுடன் டிகிரி முடித்தவர்கள் என்றால் கூடுதல் சிறப்பம்சமாக கருதப்படும்.
மாத சம்பளம்: ஜூனியர் அசிஸ்டென்ட் கம் டைப்பிஸ்ட் பணிக்கு மாதம் குறைந்தப்பட்சம் ரூ.19,900ம், அதிகபட்சமாக ரூ.63,200ம் சம்பளமாக வழங்கப்படும். ஸ்டெனோகிராபர் பணிக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.25,500ம், அதிகபட்சமாக ரூ.81,100ம் ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://exams.nta.ac.in/ என்ற இணையதளம் மூலம் டிசம்பர் மாதம் 21ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, இடபிள்யூஎஸ், பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது ரூ.600 ஆக உள்ளது. பிடபிள்யூடி-யினருக்கு கட்டணம் இல்லை.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஏதேனும் சந்தேகம் இருப்பின் என்டிஏ ஹெல்ப்லைன் எண்ணான 011-40759000 என்ற எண்ணை காலை 9 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொள்ளலாம்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications