ரூ.6.25 லட்சம் டூ ரூ.9.50 லட்சம் வரை சம்பளம்.. Infosys ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை!
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தற்போது 2 வகையான பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஒரு பணிக்கு ஆண்டுக்கு ரூ.6.25 லட்சம் சம்பளமும், இன்னொரு பணிக்கு ஆண்டுக்கு ரூ.9.5 லட்சம் சம்பளமும் வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பம் செய்வது என்பது பற்றிய விவரம் வருமாறு:
கர்நாடகா தலைநகர் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியை தலைமையிடமாக கொண்டு இன்போசிஸ் (Infosys) செயல்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இன்போசிஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.

தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் (Specialist Programmer)மற்றும் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் (Specialist Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில் ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் பணிக்கு ஆண்டுக்கு ரூ.9.5 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். அதேபோல் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் பணிக்கு ஆண்டுக்கு ரூ.6.25 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10, பிளஸ் 2 முடித்து முடித்திருக்க வேண்டும். கல்லூரி படிப்பில் 6 சிஜிஏ அல்லது 60 சதவீதம் இருக்க வேண்டும். Post Graduation என்றால் 6சிஜிபிஏ அல்லது 68 சதவீதம் இருக்க வேண்டும்.
அதாவது 2024, 2025ம் ஆண்டில் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதன்டி, பிஇ, பிடெக்,எம்இ, எம்டெக், எம்சிஏ, எம்எஸ்சி (Integrated Course - 5 years), எம்எஸ்சி (கணிதம்) உள்ளிட்ட படிப்பை படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பிஇ, பிடெக், எம்இ, எம்டெக்கை பொறுத்தமட்டில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங், இசிஇ, ஐடி, ட்ரிபிள் இ, டேட்டா சயின்ஸ்/ஆர்ட்டிபிரியல் இன்டெலிஜன்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங் , எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேனுன் இன்ஜினியரிங், சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட பிரிவுகளில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். அதேபோல், விண்ணப்பம் செய்வோர் 3 வகையான இண்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதலில் ஆன்லைனில் இண்டர்வியூ இருக்கும்.
அதன்பிறகு 2ம் கட்டமாக நேரடி இண்டர்வியூ. பிறகு எச்ஆர் உடன் சந்திப்பு இருக்கும். இதில் ஆன்லைன் இண்டர்வியூவில் 3 புரோகிராமை தந்து கோடிங் எழுத வைப்பார்கள். அதில் திறமையை பார்த்து ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர், ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications