ரூ.15 லட்சம் வரை ஊதியம்.. 30,000+ வேலை.. அனுபவம் இன்றி வீட்டில் இருந்தே பணி! செப்.,19 கடைசி நாள்
சென்னை: அக்சென்ச்சர், உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் மட்டுமின்றி, ஜியோ, பிளிப்கார்ட் உள்பட பிற Non IT நிறுவனங்களில் காலியாக உள்ள 30 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இவை அனைத்துக்கும் விண்ணப்பம் செய்ய அனுபவம் தேவையில்லை. கல்லூரி படிப்பை முடித்திருந்தாலே போதும். சில வேலைகளில் வீட்டில் இருந்தும் பணியாற்றலாம். ஒவ்வொரு வேலைகளுக்கும் தனித்தனியாக சம்பளம் வழங்கப்பட உள்ள நிலையில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கூட ஊதியம் பெற முடியும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 19ம் தேதி கடைசி நாளாகும்.
தற்போது நம் நாட்டில் படிப்பை முடிப்போர் அனைவருக்கும் விரும்பும் வேலை கிடைக்கிறதா? என்றால் கிடையாது. இதனால் பலரும் கிடைத்த வேலைகளை செய்து விட்டு தங்களின் கனவு வேலையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தான் தற்போது IT மற்றும் Non IT துறைகளில் காலியாக உள்ள 30 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்கள் இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ளது.

குறிப்பாக இது Freshers-களுக்கான அறிவிப்பாகும். இதனால் பணி அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். தற்போது வெளியாகி உள்ள இந்த அறிவிப்பு Internshala சைட் வழியாக வந்துள்ளது. Internshala சைட் என்பது கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகளை வழங்கும் ஒரு இணையதளமாகும்.
இந்த இணையதளத்தில் பிரபல நிறுவனங்களில் இருக்கும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வரும். அந்த வகையில் தற்போது 3 ஆயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்களில் இருந்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி அக்சென்ச்சர் (Accenture), ஃப்ளிப்கார்ட், பிளிங்கிட் (Blinkit), இஒய்(EY), ஜியோ உள்பட பல முன்னணி நிறுவனங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இன்ஜினியரிங், டிகிரி உள்பட எந்த படிப்புகளை படித்து இருந்தாலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு வேலை மற்றும் நிறுவனங்களை பொறுத்து சம்பளம் என்பது மாறுபடும். அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. இதனால் இந்த இணையதளம் சென்று உங்களின் தகுதிக்கு ஏற்ற வேலையை தேர்வு செய்து விண்ணப்பம் செய்யலாம்.
அதேபோல் சில நிறுவனங்களில் வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதிக்கின்றன. சில நிறுவனங்களில் அலுவலகம் சென்று பணி செய்ய வேண்டும். சில நிறுவனங்களில் Hybrid முறையில் பணி உள்ளது. அதன்படி வாரத்தில் சில நாட்கள் அலுவலகத்திலும், சில நாட்கள் வீட்டில் இருந்தும் பணியாற்றலாம். இந்த ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என்று அனைவரும் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் 1ம் தேதி வெளியானது. செப்டம்பர் 19ம் தேதி வரை இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications