டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடா? ஒரே மாவட்டத்தை சேர்ந்த 700 பேர் தேர்ச்சி?.. தேர்வர்கள் கலக்கம்
சென்னை: டி.என்.பி.எஸ்.சி கடந்த ஆண்டு நில அளவையர், வரைவாளர் பணியிடங்களுக்கு நடத்திய தேர்வில் முறைகேடு நடந்து இருக்கக் கூடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக தேர்வர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசரணை நடத்தி விளக்கம் அளிக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்சியால் நிரப்பப்படுகிறது.
ஆண்டுதோறும் கால அட்டவணை வெளியிட்டு அதன்படி பல்வேறு நிலைகளில் தேர்வு நடைபெறுகிறது. அதாவது குரூப் 1, 2,2 ஏ, குரூப் 4 என பல தேர்வுகள் நடைபெறுகின்றன.

டி.என்.பி.எஸ்.சி போட்டித்தேர்வு
அரசு வேலை என்பது பல இளைஞர்களின் கனவாக இருப்பதால் லட்சக்கணக்கான இளைஞர்கள் டி.என்.பி.எஸ்.சி போட்டித்தேர்வுகளை எழுதி வருகின்றனர். சில ஆயிரம் பணியிடங்களுக்கு லட்ச கணக்கில் இளைஞர்கள் போட்டியிடுவதை காண முடியும். ஆண்டு தோறும் இந்த எண்ணிககை கூடிக்கொண்டே செல்கிறது. அரசு வேலை மீதான மோகம் ஒரு காரணம் என்றால் நாட்டில் வேலை வாய்ப்பு குறைந்து வருவதும் ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

நில அளவையர்
குறிப்பாக 10-ம் வகுப்பு தகுதி கொண்ட குரூப் 4 பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு, முதுகலை ஏன் முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட விண்ணப்பிக்கிறார்கள். இப்படி கடும் போட்டி நிலவுவதால் இரவு பகல் பாராமல் கண் விழித்து எப்படியாவது தங்கள் லட்சியத்தை நிறைவேற்றிவிட வேண்டும் என்று பல ஆயிரக்கணக்கான தேர்வர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி நடத்திய நில அளவையர், வரைவாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு நடைப்பெற்றது.

ஒரே தேர்வு மையத்தில்
1,338 காலிபணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வை சுமார் 29 ஆயிரம் பேர் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் வெளியாகி இந்த மாத துவக்கத்தில் இருந்து கலந்தாய்வு நடைபெற்றது. பின்னர் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் பதிவு எண்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் பெரும்பாலான தேர்வர்கள் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்று சொல்லப்படுகிறது.

காரைக்குடியில் மட்டும் 700 பேர் தேர்வு
அதாவது காரைக்குடியில் இருந்து மட்டும் கிட்டதட்ட 700 பேர் தேர்வு ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. 80 சதவிகிதத்தினர் குறிப்பிட்ட ஒரே தேர்வு மையத்தில் இருந்து தேர்வாகியிருப்பதாகவும் தேர்வர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், இதில் முறைகேடுகள் எதுவும் நடந்து இருக்குமோ என்ற அச்சமும் தேர்வர்கள் தரப்பில் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

90-க்கும் மேற்பட்டவர்கள் கைது
கடந்த 2017-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் முதல் 100 இடங்களில் 35 க்கும் மேற்பட்டவர்கள் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்று தெரியவந்தது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இதில் பெரும் மோசடி நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து, 90 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யபப்பட்டு இருந்தனர். இந்த விவகாரம் அரசு பணிக்கு தயராகி வருபவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications