இஸ்ரோவில் வேலை பார்க்க ஆசையா? மாதம் ரூ.69 ஆயிரம் வரை சம்பளம்.. வந்தாச்சு சூப்பர் சான்ஸ்!
பெங்களூர்: இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இஸ்ரோவில் (ISRO) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப உதவியாளர், டிரைவர், டெக்னிஷியன் உள்ளிட்ட பணிகளை நிரப்ப அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 69,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?, எப்படி விண்ணப்பிப்பது? போன்ற விவரங்களை இங்கே முழுமையாக பார்க்கலாம்.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இஸ்ரோவின் தலைமை அலுவலகம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ளது. விண்வெளி ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு நிகராக தேசத்தை பெருமைப்படுத்தி வருகிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள். பிரதமரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் விண்வெளி துறையின் கீழ் இஸ்ரோ செயல்படுகிறது.

இஸ்ரோ நிறுவனத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப் படுகிறது. அந்த வகையில் தற்போது இஸ்ரோ நிறுவனம் டிரைவர், டெக்னிஷியன் உள்ளிட்ட பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. தொழில்நுட்ப உதவியாளர் (மெக்கானிக்கல்) - 11
2. தொழில்நுட்ப உதவியாளர் (எலக்ட்ரானிக்ஸ்) - 01
3. துணை அதிகாரி - 01 4. டெக்னிஷீயன் (டர்னர்) - 01
5. டெக்னிஷீயன் (ஃபிட்டர்) - 04
6. டெக்னிஷீயன் - 01
7. கனரக வாகன ஓட்டுநர் - 02
8. இலகுரக வாகன ஓட்டுநர் - 02
என மொத்தம் 23 பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
டெக்னிக்கல் உதவியாளர் மற்றும் துறை சார்ந்த பிரிவில் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். அதாவது மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டெக்னிஷியன் பணிக்கு துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ படித்து இருப்பது அவசியம். டிரைவர் பணியிடங்களுக்கு ஹெவி மற்றும் எல்.எம்.வி லைசன்ஸ் வைத்து இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு?
தொழில்நுட்ப உதவியாளர்: ரூ. 44,900 - ரூ. 42,400/-
டெக்னிஷியன்: ரூ.21,700 - 69,100 (நிலை 3)
டிரைவர்: ரூ.19,900 - 63,200
வயது வரம்பு:
35 வயதுக்கு மிகாதவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்துவிட்டு தேர்வுக்கு விண்ணபிக்கலாம். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப கட்டணமாக ரூ. 750 செலுத்த வேண்டும். (ரூ.500 திருப்பி தரப்படும்). எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 12.08.2025 அன்று தொடங்குகிறது. விண்ணப்பிக்க வரும் 26.08.2025 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.lpsc.gov.in/docs/01-2025%20Detailed.pdf
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications