IT JOBS: நாளை மதியம் இண்டர்வியூ.. HCL வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. சென்னையில் பணி
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு (HCL IT JOBS) குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ நாளை (மார்ச் 9) மதியம் 1 மணி முதல் 3 மணி வரை சோழிங்நல்லூரில் நடைபெற உள்ளது. தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனமா எச்சிஎல்-லில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து Freshers Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இது Freshers-களுக்கான பணியாகும். இதனால் முன்அனுபவம் தேவையில்லை. இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம் என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
கல்வி தகுதி என்ன?
இந்த பணிக்கு ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இவர்கள் 2024,2025ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும். அதன்படி பிஎஸ்சி, பிபிஏ, பிஏ, பிசிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மேலும் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி படிப்புகளை 2026ம் ஆண்டில் முடிப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
ஆங்கிலத்தில் பேச வேண்டும்
அதேவேளையில் பிஇ, பிடெக்கில் இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக இ-மெயில் மற்றும் சாட் சப்போர்ட் வழங்க தெரிந்திருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
நாளை இண்டர்வியூ
இந்த பணிக்கான இண்டர்வியூர் மார்ச் 9ம் தேதி (நாளை) மதியம் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Sholinganallur (No.602/3/138), Elcot EconomicZone, Sholinganallur Medavakkam, High Road, sholinganallur - 600 119, Chennai என்ற முகவரியில் இண்டர்வியூ நடைபெற உள்ளது.
சென்னையில் நியமனம்
இண்டர்வியூ Face to Face முறையில் நடைபெறும். லேப்டாப் எடுத்து செல்ல வேண்டும். ரெஸ்யூம் மற்றும் அரசு அடையாள அட்டையை கையில் வைத்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. அநேகமாக சென்னை சோழிங்கநல்லூரிலேயே பணியாற்ற வாய்ப்புள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications