IT Jobs: வீட்டில் இருந்தே வேலை.. அனுபவம் தேவையில்லை.. நாளை - நாளை மறுநாள் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு (IT Jobs) குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ நாளை (19ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (20ம் தேதி) என 2 நாட்கள் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்யும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு Syncfusion ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சென்னையிலும் இயங்கி வருகிறது. தற்போது அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.

இந்த அலுவலகத்தில் தற்போது சாப்ட்வேர் டெவலப்பர் (Software Developer) பிரிவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியை விரும்புவோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2வில் 75 சதவீத மதிப்பெண்ணுடன் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதன்பிறகு பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்எஸ்சி - கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
2025ம் ஆண்டில் கல்லூரியில் இளநிலை படிப்பை 65 சதவீத மதிப்பெண்ணுடன் முடித்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி விண்ணப்பம் செய்வோவருக்கு C#, Java, C++, Python உள்ளிட்டவை ஸ்கில்லாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (ஆகஸ்ட் 19) மற்றும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 20) ஆகிய நாட்களில் காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு சிறிது காலம் Probation Period ஆக இருக்கும். இந்த காலக்கட்டத்தில் அனைவரும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அலுவலகம் சென்று பணியாற்ற வேண்டியிருக்கும். Probation Period முடிந்த பிறகு வீட்டில் இருந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான ஆண்டு சம்பளமாக ரூ.2 லட்சம் வழங்கப்படும். இண்டர்வியூவில் செயல்படும் விதத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த பணிக்கு பாண்ட் (Bond) எதுவும் கிடையாது. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள க்யூஆர் கோட்-டை ஸ்கேன் செய்து அதன்படி இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications