ரூ.6 லட்சம் வரை சம்பளம்.. அனுபவம் எதுவும் வேண்டாம்.. ஐடி நிறுவனம் தரும் சூப்பர் வேலை
சென்னை: இன்ஜினியரிங் அல்லது டிகிரி எந்த பிரிவில் முடித்து அனுபவம் இல்லாமல் இருப்போருக்காக புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.3 லட்சம் வரையும், அதிகபட்சமாக ரூ.6 லட்சம் வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பணியை பெறலாம்.
நம் நாட்டின் மகாராஷ்டிரா மாநிலம் புனேவை தலைமையிடமாக கொண்டு ஜென்சர் (Zensar) ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நம்நாட்டின் பிரபல தொழில் குழுமமான ஆர்பிஜியின் கீழ் செயல்பட்டு வருகிறது.

ஜென்சர் நிறுவனம் ஐடி துறையில் அப்ளிகேஷன் மேனேஜ்மென்ட் , டிஜிட்டல் சொல்யூஷன்ஸ் மற்றும் டெக்னாலஜி சர்வீஸ்களை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் இந்தியா மட்டுமின்றி மெக்சிகோ, தென்ஆப்பிரிக்கா, பிரிட்டன், அமெரிக்கா உள்பட பல நாடுகளில் அலுவலகங்கள் உள்ளன.
இந்நிலையில் தான் ஜென்சர் அலுவலகத்தில் தற்போது GEN AI - Annotation - Labeling or Prompt Engineering பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு எந்த முன்அனுபவமும் தேவையில்லை. விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
டிகிரி படிப்பை எடுத்து கொண்டால் பிஎஸ்சி, பிகாம், பிசிஏ பிபிஏ, பிஏ, எம்எஸ்சி, எம்காம், எம்பிஏ, எம்சிஏ, எம்ஏ, ஆர்ட்டிபிஷியல் இன்டெனலிஜன்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங் உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
அதேபோல் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இன்ஜினியரிங் படிப்பை எடுத்து கொண்டால் ஆட்டோமொபைல், ஆட்டோமோட்டிவ், பயோ டெக்னாலஜி, கெமிக்கல், சிவில், கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், இன்பர்மேஷன் டெக்னாலஜி உள்பட எந்த பிரிவில் இன்ஜினியரிங்கை முடித்திருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம்.
இதுதவிர விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் புதிய டெக்னாலஜியை கற்கும் திறன் இருக்க வேண்டும். தனியாகவும், டீமாகவும் சேர்ந்து பணியாற்ற தெரிய வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.6 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். சம்பளம் என்பது தகுதி மற்றும் திறமையை பொறுத்து நிர்ணயம் செய்யப்படும். மேலும் புராஜெக்ட்டை பொறுத்தும் மாறுபடும். சம்பளம் குறித்து இண்டர்வியூவின் இறுதியில் தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. விண்ணப்பம் செய்வோருக்கு இ-மெயில் அல்லது தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here


Click it and Unblock the Notifications
