61,000 ஐடி ஊழியர்கள் திடீர் பணி நீக்கம்.. 2025ல் தொடரும் சோகம்.. லிஸ்ட்டில் இருக்கும் நிறுவனங்கள்
சென்னை: தற்போது ஐடி துறை பெரும் சவாலை எதிர்கொண்டு வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஏஐ வருகை என்பது ஐடி துறையில் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க காரணமாக உள்ளது. இந்நிலையில் தான் 2025 ம் ஆண்டு தொடக்கம் முதல் இப்போது வரை 61 ஆயிரம் ஐடி ஊழியர்கள் திடீரென்று பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த பணி நீக்க நடவடிக்கையை பல முன்னணி ஐடி நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஐடி துறையில் தற்போது தொடர்ந்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு 2 விஷயங்கள் காரணமாக உள்ளன. இதில் முதல் காரணம் என்னவென்றால் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு ஐடி துறையில் அதிகரித்து வருவது தான். இன்னொரு காரணம் என்று பார்த்தால் நிறுவனங்களின் செலவை குறைப்பது தான்.

கடந்த ஆண்டு முதல் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி வருகிறது.2025ம் ஆண்டில் ஊழியர்களின் பணி நீக்க நடவடிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை என்பது அப்படியே தான் உள்ளது.
இந்நிலையில் தான் 2025ம் ஆண்டில் இதுவரை பல்வேறு முக்கிய ஐடி நிறுவனங்களில் இருந்து 61 ஆயிரம் பேர் வேலையை இழந்துள்ளனர். இந்த பட்டியலில் மைக்ரோசாப்ட், கூகுள், அமேசான், குரோட் ஸ்டிரைக் (CrowdStrike) உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கி உள்ளது.
இதுதொடர்பாக Layoffs.fyi வழங்கி உள்ள டேட்டாப்படி 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை மொத்தம் 130 கம்பெனிகள் பணி நீக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. இதில் மைக்ரோசாப்ட் மட்டும் 6 ஆயிரம் பேரை நீக்கி உள்ளது. அதுமட்டுமின்றி கடந்த 2023ம் ஆண்டு முதல் பணி நீக்க நடவடிக்கையில் தொடர்ந்து மைக்ரோசாப்ட முதலிடத்தில் உள்ளது. கடந்த மே மாதம் 13ம் தேதி மட்டும் வாஷிங்டனில் உள்ள நிறுவனத்தில் 2000 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் கூகுள் நிறுவனமும் கடந்த 2025ம் ஆண்டு முதல் பணி நீக்க நடவடிக்கையை தொடர்ந்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டில் 12 ஆயிரம் பேர் பணி நீக்கியது கூகுள். அதன்பிறகும் கூட தொடர்ந்து பணி நீக்க நடவடிக்கையை தொடர்ந்து வருகிறது. மே மாத தொடக்கத்தில், தற்போது வரை 200 பேரை கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது.
அமேசான் நிறுவனம் டிவைஸ் மற்றும் சர்வீசஸ் டிவிஷனில் 100 பேரை நீக்கி உள்ளது. CrowdStrike நிறுவனம் என்பது கடந்த வாரம் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டது. உலகம் முழுவதும் பணியாற்றும் நபர்களில் 5 சதவீதம் பேரை பணியில் இருந்து நீக்கி உள்ளது. மார்க்கெட் நிலைமையை பொறுத்த இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக Crowdstrike நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல் ஐபிஎம் நிறுவனம் சில நூறு பணியாளர்களை நீக்கி உள்ளது. இருப்பினும் ஏஐ ஆட்டோமேஷன் பணி தொடர்பாக ஆட்களை சேர்க்கும் நடவடிக்கையை தொடங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications