சம்பள உயர்வில் கை வைக்கும் இன்போசிஸ்.. ஐடி ஊழியர்களுக்கு அதிர்ச்சி! காரணம் இதுதானாம்
பெங்களூர்: பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இன்போசிஸ் நிறுவனத்தில், வழக்கமாக ஆண்டின் துவக்கத்தில் சம்பள உயர்வு இருக்கும். ஆனால் தற்போது ஐடி துறையில் நிலவும் நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட காரணங்களால் சம்பள உயர்வு தள்ளிவைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் டெக்கிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் இந்த ஆண்டு வருடாந்திர சம்பள உயர்வை தாமதம் செய்யலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட காரணங்களால் 2024-25 நிதி ஆண்டின் நான்காவது காலாண்டின் சம்பள உயர்வு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இன்போசிஸ் நிறுவனம்
கடைசியாக கடந்த நவம்பர் 2023 ஆம் ஆண்டு இன்போஸ்சில் சம்பளம் உயர்த்தப்பட்டது. வழக்கமாக ஆண்டின் துவக்கத்தில் சம்பளம் உயர்த்தப்படும் நிலையில் தற்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஐடி துறை இன்னும் நிச்சயமற்ற சூழலில் இருப்பதையே இந்த நிகழ்வு காட்டுவதாக அத்துறையை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
பணவீக்கம், பொருளாதார காரணிகள் உள்ளிட்ட மேக்ரோ-பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக கிளையண்ட்கள் ஐடி செலவினங்களை அதிகரிக்கவில்லை என்பதே மந்தநிலைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டும் இன்றி டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் வரி விதிப்பு அதிகரிக்கப்படலாம் என்பதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சம்பளம் உயர்த்தாத ஐடி நிறுவனங்கள்
டொனால்டு டிரம்ப் வரும் 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். அவரது ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஏற்ப இதில் மாற்றம் இருக்கலாம் என்று தெரிகிறது. இன்போசிஸ் மட்டும் இன்றி ஹெச்.சி.எல் டெக், எல்.டி.ஐ மிண்ட்ரீ மற்றும் எல்&டி டெக் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களும் இரண்டாவது காலாண்டில் சம்பளம் உயர்த்தவில்லை. செலவீனங்கள் மற்றும் வருவாயை மேனேஜ் செய்யும் வகையில் சம்பள உயர்வை கைவிட்டது.
டிசம்பர் இரண்டாவது காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் லாபம் குறையக் கூடும் என்று மோதிலால் ஒஸ்வால் நிதி சேவை நிறுவனம் தனது முன் வருவாய் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. ஊழியர்கள் விடுப்பில் செல்வது மற்றும் வேலை நாட்கள் குறைவாக இருப்பதே இதற்கு காரணம் எனவும், எனினும் விலையை உயர்த்துவது ப்ராஜெக்ட் மேக்சிமஸ் ஆகியவற்றை பயன்படுத்தி ஈடு செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் இலாபம் கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது அதிகரிக்கவே செய்துள்ளது. ஜூலை - செப்டம்பர் இரண்டாவது காலாண்டில் லாபம் ரூ.6,506 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய காலாண்டில் ரூ.6,212 கோடியாக இருந்தது.












Click it and Unblock the Notifications