இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியில் வேலை.. டிகிரி போதும்! தமிழ்நாட்டிலும் காலிப்பணியிடம் இருக்கு
சென்னை: மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை வங்கி இந்திய அஞ்சல் கட்டண வங்கி லிமிடெட் (IPPB). இந்த வங்கியில் தற்போது 51 எக்சிகியூட்டிவ் பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
இந்திய அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சல் கட்டண வங்கி லிமிடெட் (IPPB) மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. நாடு முழுவதும் 6 கோடிக்கும் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது இந்த வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 51 எக்சிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் என்பனவற்றை இங்கே விரிவாக பார்க்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப சம்பளமாக மாதம் ரூ.30,000 வழங்கப்படும்.
பணியிடங்கள் விவரம்: 51 எக்சிகியூட்டிவ் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழகத்தில் - 3 பணியிடங்கள், புதுச்சேரியில் - 1, கேரளா - 1, சத்தீஸ்கர் - 3, குஜராத் - 6, பீகார் 3, அசாம் -3, மகாராஷ்டிரா 3, கோவா - 1 என நாடு முழுவதும் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி: கல்வித் தகுதியை பொறுத்தவரை மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் விண்ணப்பதாரர்கள் எதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் படித்திருந்தால் போதும்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 21 வயது நிரம்பியவர்களும், 35 வயதுக்கு மிகாதவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ் சி எஸ் டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். பிற அலவன்ஸ் எதுவும் கிடையாது.
தேர்வு முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். காலிப்பணியிடங்கள் உள்ள மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்..
இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலன பணி ஆகும். ஓராண்டு ஒப்பந்தத்தில் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். பணியில் திருப்தி ஏற்பட்டால் அடுத்தடுத்து ஒப்பந்த காலம் நீட்டிக்கப்படும். அதிகபட்ச ஒப்பந்த ஆண்டு காலம் 3 ஆகும்.
விண்ணபிப்பது எப்படி?: ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். எஸ்.சி /எஸ்.டி/ மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.150 கட்டணம் ஆகும். இதர பிரிவினருக்கு ரூ.750 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க இன்று (01.03.2025) அவகாசம் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள் 21.03.2025 ஆகும்.
விண்ணப்ப அறிவிப்பினை படிக்க:
https://www.ippbonline.com/documents/20133/133019/1740735228338.pdf
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications