இந்திய அணுமின் கழகத்தில் வேலை.. ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. எக்ஸாம் கிடையாது!
சென்னை: இந்திய அணுமின் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரீஷியன், பிட்டர் உள்பட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.9600 வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
இந்திய அணுமின் கழகத்தில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அரசு பொதுத்துறை நிறுவனமாக NPCIL இந்திய அணு சக்தி கழகம் உள்ளது.

அணுசக்தித் துறையால் (DAE) நிர்வகிக்கப்படும் இந்த கழகமானது அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை கண்காணித்து வருகிறது. நாட்டில் உள்ள மிக முக்கிய அரசு பொதுத்துறை நிறுவனமாக உள்ள இந்திய அணுமின் கழகத்தில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
ஃபிட்டர் - 68
எலக்ட்ரீஷியன் - 68
எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 68
புரோகிராமிங் மற்றும் சிஸ்டம்ஸ் நிர்வாக உதவியாளர் {கணினி ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் உதவியாளர் (COPA)} - 10
டர்னர் - 10
மெஷினிஸ்ட் - 10
வெல்டர் - 11
கல்வித் தகுதி, வயது வரம்பு:
சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளை பின்பற்றி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். அதாவது எஸ்சி/எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் 29 வயது வரையும், ஒபிசி பிரிவை சேர்ந்தவர்கள் என்றால் 27 வரையும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் அப்ரெண்டீஸ் பணியாளர்களுக்கு மாதம் ரூ.9,600-சம்பளம் வழங்கப்படும். மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு துறை மற்றும் தொழில் துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதாவது, https://www.apprenticeshipindia.gov.in" என்ற இணையதளத்தில் பதிவு செய்த பிறகு
அணுமின் கழக வெப்சைட்டில் விண்ணப்பிக்க வேண்டும். "www.npcilcareers.co.in என்ற இணையதளத்தில் 18.03.2026 (16:00 Hrs.) முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வர்கள் தேர்வு அறிவிப்பை படித்து உறுதி செய்து கொள்வது அவசியம்.












Click it and Unblock the Notifications