ரூ 10 ஆயிரம் முதல் ரூ 30 ஆயிரம் வரை ஊதியம்.. டிச. 18 இல் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றிடுங்கள்!
சென்னை: பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழிற்பயிற்சி மையம் சார்பாக சென்னையில் வரும் 18-ஆ்ம தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இந்த முகாமில் பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டாலும் தேவையான தகுதி மற்றும் அனுபவம் பெற்றுள்ள பொதுப் பிரிவினரும் கலந்து கொள்ளலாம்.
சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழிற்பயிற்சி மையத்தில் அதாவது வேலைவாய்ப்பு அலுவலகக் கட்டடம், மூன்றாவது தளத்தில் நடைபெறுகிறது.

காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. பிபிஓ, வங்கி, காப்பீடு, மின் வர்த்தகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், விளம்பரத் துறை, மனிதவள மேம்பாடு, சந்தைப்டுத்துதல் உள்ளிட்ட துறைகளில் புதியவர்களும் அனுபவம் உள்ளவர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளன.
மாதம் ரூ 10 ஆயிரம் முதல் ரூ 30 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கும். வயது வரம்பு 20 முதல் 35 வரை மட்டுமே. இளநிலை பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதே நேரம் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் தகுந்த பணிகள் வழங்க தேர்வு செய்யப்படுவர்.
விருப்பமுள்ளவர்கள் நேரடியாக வரலாம். பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழிற்பயிற்சி மையத்தின் வேலைவாய்ப்பு இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்யலாம். இதற்காக ஆதார் எண் அவசியம் தேவை.
நேர்காணலுக்கு வரும் போது முக்கிய ஆவணங்களின் அசலையும் நகல்களையும் முகாமிற்கு எடுத்துவர வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு 044-24615112. இதுகுறித்து தொழிற்பயிற்சி மையத்தின் மண்டல வேலைவாய்ப்புத் துணை அலுவலர் எஸ் கே சாஹூ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications