மத்திய உள்துறை அமைச்சகத்தில் இன்டலிஜென்ஸ் ஆபிசராக ஆசையா.. தமிழக இளைஞர்களே சூப்பர் சான்ஸ்
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள நுண்ணறிவு பிரிவில் காலியாக உள்ள 797 இளநிலை நுண்ணறிவு அதிகாரி பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க 23.06.2023 அதாவது நாளை மறுநாள் கடைசி நாளாகும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள நுண்ணறிவு பிரிவில் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளன. இன்டலிஜென்ஸ் ஆபிசராக பணியாற்ற விரும்புவோர் நாளை மறுநாளுக்குள் விண்ணப்பித்துவிடுங்கள்.

எத்தனை பணியிடங்கள் உள்ளன.என்ன தகுதி. வயது தளர்வுகள் என்ன, கட்டணம் எவ்வளவு , தேர்வு எப்படி நடைபெறும் என்பதை பார்ப்போம்.
பணியின் பெயர்: இளநிலை நுண்ணறிவு அதிகாரி (junior Intelligence Officer) Grade- II (Technical).
மொத்தம் எத்தனை காலியிடங்கள்: 797 (பொது-325, பொருளாதார பிற்பட்டோர்-79, ஒபிசி-215, எஸ்சி-119, எஸ்டி-59).
வயது தகுதி: 23.06.23 தேதியின்படி 18 முதல் 27க்குள். எஸ்சி.,எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும் என்று அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்: தேர்வு கட்டணம் ₹50/- மற்றும் விண்ணப்ப கட்டணம் ₹450/-. இதை பொது பிரிவினர், பொருளாதார பிற்பட்டோர் மற்றும் ஒபிசியினர் செலுத்த வேண்டும். எஸ்சி.,எஸ்டியினருக்கு கட்டண விலக்கு உண்டு. இதை விண்ணப்பிக்கும் போது ஆன்லைனில் முறையில் செலுத்த வேண்டும்.
எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்: ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.mha.gov.in அல்லது www.ncs.gov.in ஆகிய இணையதளங்களின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.06.2023. ஆகும்.
------------
இதுதவிர ரீஜினல் ரூரல் வங்கி என்று அழைக்கப்படும் கிராமிய வங்கிகளில் (Regional Rural Bank) அதிகாரிகள் பணியிடங்கள், I,II & III மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட் காலியிடங்கள் என மொத்தம் 8594 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் ஐபீபிஎஸ்-ஆர்ஆர்பி தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு உள்ளது.
ஆபீஸ் அசிஸ்டென்ட் பணிக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இதர பணிகளுக்கு ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஆபீசர் ஸ்கேல்-1 மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட் பணிகளுக்கான ஆன்லைன் எழுத்துத் தேர்வானது, முதல் நிலை தேர்வு மற்றும் பிரதான தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறும்.சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, வேலூர், விருதுநகர், புதுச்சேரியில் முதல் நிலை தேர்வு (Preliminary) நடைபெறும். சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய மையங்களில் பிரதான தேர்வு (Main) நடைபெறும்.
எப்படி விண்ணப்பிப்பது? www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று 21.6.2023.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications