எழுத படிக்க தெரிந்தால்.. மாசம் ரூ.50000 சம்பளம்- சென்னை காவல்துறையில் வேலை.. விண்ணப்பம் உள்ளே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள குதிரைப்படையில் குதிரை பராமரிப்பாளர் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். விரும்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு காவல்துறையில் காலியிடங்களை நிரப்புவது தொடர்பான காவல் ஆணையாளர் சென்னை பெருநகர காவல் அதிகாரி அவர்களின் செய்தி குறிப்பு பின்வருமாறு:

குதிரைப்படையில் கீழ்காணும் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது தகுதி

வயது தகுதி

பதவியின் பெயர் : குதிரை பராமரிப்பாளர்
காலியிடம் : 10
ஊதிய விவரம்: புதிய ஊதியப்பட்டை நிலை (1,1) ரூ.15700 முதல் ரூ.50000 வரை.
வயது (31.03.2023) அன்று 18 வயது முடிந்தவராகவும், அவரவர் பிரிவிற்கு உரிய 30,32, 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இதர பிரிவினர் - 30 வயது, பிற்படுத்தப்பட்டோர்- 32, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்-32, பழங்குடியினர் -35, ஆதிதிராவிடர் -35, அருந்ததியினர் -35.

விண்ணப்பம்

விண்ணப்பம்

கல்வித் தகுதி: தமிழில எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: குதிரை பராமரிப்பாளர் விண்ணப்பபம், காவல் ஆணையாளர் அலுவலகம், சென்னை பெருநகர காவல், வேப்பேரி, சென்னை-7.
விண்ணப்பதாரர்கள் அவரவர் அசல் சான்றிதழ்களை சரிபார்க்கும் நாள் இடம்: 17.04.2023 காலை 7.00 மணி, இடம் : ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், ருக்குமணி இலட்சுமிபதி சாலை (மார்ஷல் சாலை) எழும்பூர், சென்னை-8

கடைசி தேதி

கடைசி தேதி

ஒரு வெள்ளைத் தாளில் விளம்பரத்தில் அளிக்கப்பட்டுள்ள மாதிரி படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பம் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.
ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
17.04.2023 அன்று சான்றிதழ்களை சரிபார்க்க நேரில் ஆஜராக வேண்டும். ஆஜராகாவிட்டால் உங்களது விண்ணப்பம் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். மீண்டும் உரிமை கோர இயலாது.
இப்பணிக்கு தேர்வாகும் பட்சத்தில், பணி நிமித்தமாக அவ்வப்போது உருவாக்கப்படும் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பணிபுரிய வேண்டும்.

தினமும் என்ன வேலை

தினமும் என்ன வேலை


குதிரை பராமரிப்பாளர்களின் வேலைகள் கீழ்க்கண்டாவறு...
தினமும் காலை 4.30 மணிக்கு அறிக்கை செய்ய வேண்டும்.
குதிரைகளை எழுப்ப வேண்டும்.
குதிரைகள் படுத்திருந்த வைக்கோல்களை அகற்ற வேண்டும்.
குதிரை லாயத்தை சுத்தம் செய்ய வேண்டும்
குதிரைகளின் சாணங்களை அதற்குரிய இடத்தில் கொண்டு போய் நிரப்ப வேண்டும்.
குதிரைகளின் உடம்பிலுள்ள அழுக்குகளை சுத்தம் செய்தல் வேண்டும்.
குதிரைகளுக்கு ஒரு நாளைக்கு நான்கு முறை இடைவெளிவிட்டு தீவணம் வைக்க வேண்டும்.
குதிரைகளுக்கு லாடம் கட்டும் பொழுது லாடம் கட்டுபவருக்கு உதவி செய்ய வேண்டும். அவ்விடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
குதிரைகளை கால்நடை மருத்துவமனைக்கு மாதந்தோறும் ஒரு முறையும் மற்றும் உடல் நிலை சரியில்லாத நேரத்திலும் அழைத்து செல்ல வேண்டும்.
குதிரை உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டால் உடனிருநது கவனிக்கப்பட வேண்டும். குதிரைகளுக்கு அதற்குரிய நேரத்தில் தண்ணீர் காட்ட வேண்டும்.
பணிகளுக்கு சென்று திரும்பும் குதிரைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
மூன்று நாட்களுக்கு ஒரு முறை குதிரைகளை குளிக்க வைக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+