Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐடி நிறுவனங்களுக்கு இது போதாத காலம் போல.. சம்பளத்தை குறைத்த விப்ரோ.. கொதிக்கும் நெட்டிசன்கள்

விப்ரோ நிறுவனம் புதிதாக வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சம்பளத்தை குறைத்து கடிதம் அனுப்பி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐடி நிறுவனங்களுக்கு இது போதாத காலம் போல.. ஐடி நிறுவனமான விப்ரோ, ₹6.5 லட்சம் சம்பளத்தில் டர்போ திட்டத்தில் பிரஸ்சர்களை கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்ந்தெடுத்தது. ஆனால் கடந்த ஓராண்டு மேலாக அவர்களை வேலைக்கு சேர்க்கவில்லை. டர்போ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள், எலைட் திட்டத்தின் கீழ் சேர விரும்புவோர் சேரலாம் என ஆப்சன் வழங்கி உள்ளதாம். இதற்கான சம்பளம் 3.5 லட்சம் என்று அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பொருளாதார மந்த நிலை காரணமாக ஐடி நிறுவனங்கள் இன்டர்னல் தேர்வு என வைத்து, அதில் பலரும் தோல்வியுற்றதாக கூறி பலரையும் பணி நீக்கம் செய்து வருகின்றன. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனம் கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, 6.5 லட்சம் ரூபாய் வருடத்திற்கு சம்பளமாக நிர்ணயம் செய்திருந்தது, தற்போது 3.5 லட்சம் சம்பளத்தில் தான் வேலை இருக்கிறதா.. உடனே சேர தயாராக இருக்கிறீர்களா என்று கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதற்கு விப்ரோ நிறுவனத்தில் தேர்வானவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர்கள் அரசு இந்த விவாகரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 6.5லட்சம் சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்பதற்காகத்தான் நாங்கள் ஓராண்டுக்கு மேலாக காத்திருக்கிறோம். 3.5லட்சம் என்றால் கடந்த ஆண்டே நாங்கள் சேர்ந்திருப்போம். இப்போது வந்து 3.5லட்சத்தில் வேலை இருக்கு வருகிறீர்களா என்று கேட்டால் என்ன அர்த்தம், எங்களுக்கு வேதனையாக உள்ளது என மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மந்த நிலை

மந்த நிலை

உலகளாவிய பொருளாதார மந்த நிலை, உக்ரைன் ரஷ்யா போர் போன்ற காரணங்கள் ஐடி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனை சமாளிக்க விப்ரோ உள்பட பல ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளன. கூகுள் தொடங்கி பேஸ்புக் வரை அனைத்திலும் ஆட்குறைப்பு அறிவிப்புகள் நடந்து வருகின்றன. உலகின் பல நாடுகளில் பொருளாதார மந்த நிலை ஆட்டிப்படைப்பதால் இந்தியாவிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கிறது.

என்ன சம்பளம்

என்ன சம்பளம்

இந்நிலையில், கடும் எதிர்ப்பு எழுந்துள்ள விப்ரோவின் புதிய திட்டத்தை இப்போது பார்ப்போம். புதிய பட்டதாரிகளுக்கு அந்நிறுவனம் எலைட் மற்றும் டர்போ எலைட் என இரு பணியமர்த்தல் திட்டங்களை வழங்குகிறது. இதில் எலைட் ஊழியர்களுக்கு வருடத்திற்கு 3.5 லட்சம் சம்பளத்தினை வழங்குகிறது. அதேசமயம் டர்போ ஊழியர்களுக்கு வருடத்திற்கு 6.5 லட்சம் ரூபாய் சம்பளத்தினை வழங்குகிறது.

மாணவர்கள்

மாணவர்கள்

முதலாவதான டர்போ ஊழியர்கள் எனில் விப்ரோ நிறுவனத்தின் திறனை மேம்படுத்தும் பயிற்சியினை பெற வேண்டும். வருடத்திற்கு 6.5 லட்சம் ரூபாய் சம்பளத்தினை பெற்ற ஊழியர்கள், நிறுவனத்தின் ஆன்போர்டிங்கிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 16 அன்று விப்ரோவிடமிருந்து ஒரு மெயில் வந்தது. அதில் குறைந்த ஊதியம் பெறும் ஆப்சனை தேர்வு செய்யவும் என மெயில் வந்துள்ளது. இந்த ஆஃபரை மாணவர்கள் ஏற்றக் கொண்டால், அவர்கள் மார்ச் முதல் ஆன்போர்டு செய்யப்படுவார்கள். மேலும் முந்தைய சலுகைகள் அனைத்தும் செல்லாது. இந்த சலுகையை ஏற்க நீங்கள் தேர்வு செய்தால், முந்தைய சலுகைகள் அனைத்தும் செல்லாது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். ஏனெனில் இது காலக்கெடுவுக்கு உட்பட்டது என விப்ரோ அறிவித்தது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இதற்கு ட்விட்டரில் நெட்டிசன்கள் மத்தியில் கடும் எதிப்பு எழுந்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, முன்பு ₹6.5 லட்சம் சம்பளம் ஆண்டுக்கு வழங்கப்படும் என அறிவித்தது. இப்போது புதியவர்களைளுக்கு ஆண்டுக்கு ₹3.5 லட்சத்தில் வேலையில் சேருமாறு கேட்டுக்கொள்கிறது. கொடுத்த வார்த்தையை காப்பாற்ற முடியாத விப்ரோவால், வேலையாட்கள் குறித்து சரியாக திட்டமிட முடியாது என்பதை காட்டுகிறது என்றும், இந்நிறுவனம் எப்படி எதிர்காலத்தில் திறமையானவர்களின் நம்பிக்கை பெறும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

வேதனை

வேதனை

இன்னொரு நெட்டிசனோ, "விப்ரோ எங்கள் எதிர்காலத்துடன் விளையாடுகிறது, நாங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக எங்கள் ஆன்போர்டிங்கிற்காக காத்திருக்கிறோம். தயவு செய்து அனைவரும் எங்கள் வாழ்க்கையைத் தொடங்க எங்களுக்கு உதவுங்கள்" என்று கோரிக்கை வைத்துள்ளார். இன்னொருவர் ட்விட்டரில், , "அவர்கள் அனுபவம் வாய்ந்த மென்பொருள் இன்ஜினியர்களுக்கும் அதே சம்பளத்தை வழங்குகிறார்கள். அவர்கள் புதியவர்களை பணியமர்த்தவில்லை, அத்துடன் மந்தநிலை அவர்களை பாதிக்கிறது என்று கூறியுள்ளார்.

என்ன விளக்கம்

என்ன விளக்கம்

இதனிடையே விப்ரோ இது தொடர்பாக வெளியிட்ட விளக்கத்தில், "எங்கள் திறமையாளர்கள் தான் எங்களின் மிகவும் மதிப்புமிக்க சொத்து. எங்களின் தற்போதைய மற்றும் வருங்கால ஊழியர்கள் அனைவரும் வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்க மற்றும் அவர்களின் இலக்குகளை அடையக்கூடிய சூழலை உருவாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஐடி துறையில் ஏற்பட்ட மந்த நிலை மற்றும் அதனால் ஏற்பட்ட விளைவாக, எங்கள் வணிகத் தேவைகள், நாங்கள் எங்கள் ஆன்போர்டிங் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டியிருந்தது என் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+