ரெப்கோ வங்கியில் வேலை.. 10 ஆம் வகுப்பு கல்வி தகுதிதான்.. செம சான்ஸ்! உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கியான ரெப்கோவில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித்தகுதி என்ன என்பது உள்ளிட்டவற்றை இங்கே பார்க்கலாம்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கி ரெப்கோ. மியான்மர் மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து மீண்டும் இந்தியாவிற்கு திரும்பியோர்களின் (Repatriates) வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக இந்த வங்கி உருவாக்கப்பட்டது. 1969-ல் தொடங்கப்பட்ட இந்த வங்கி ஒரு கூட்டுறவு வங்கியாகும்.

ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, உள்ளிட்ட பகுதிகளில் இந்த வங்கியின் கிளைகள் உள்ளன. ரெப்கோ வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பபடுவது வழக்கம். அந்த வகையில், தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள்: ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள அலுவலகர் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி: இந்த பணியிடங்களுக்கு கல்வி தகுதியினை பொறுத்தவரை 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 18-வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. அதாவது ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸசி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
சம்பளம்: சம்பளத்தை பொறுத்தவரை மெட்ரோ நகரங்கள் என்றால் மாதம் ரூ.10 ஆயிரமும், மெட்ரோ அல்லாத நகரங்கள் என்றால் மாதம் ரூ.9,500- வழங்கப்படும். இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது ஆகும். எனினும், பணிக்கு தேர்வு செய்யப்பட்ட பின் திறமையின் அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பணி நிரந்தரம் செய்ய பரிசீலிக்கப்படுவார்கள். தகுதியும் விருப்பமும் உள்ளவர் 10.07.2024 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ஒபிசி, பொது பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, REPATRIATES - ஆகியோர் 250 செலுத்த வேண்டும். டிடி மூலமாக விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும். டூ விலர் லைசன்ஸ் வைத்து இருப்பது அவசியம். விண்ணப்ப படிவத்தை www.repcobank.co.in/www.repcobank.com என்ற இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை
The Additional General Manager (Admin),
Repco Bank Ltd, P.B.No.1449,
Repco Tower,
No:33, North Usman Road,
T.Nagar, Chennai - 600 017.
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சென்னையில் மட்டுமே தேர்வு நடைபெறும். தேர்வு நடைபெறும் இடம், தேதி பின்னர் அறிவிக்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதார்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும். https://repcobank.s3.ap-south-1.amazonaws.com/Notification+OA%28T%29.pdf












Click it and Unblock the Notifications