ரயில்வே அமைச்சக நிறுவனத்தில் வேலை.. 600 காலிப்பணியிடங்கள்! டிப்ளமோ முடிச்சிருக்கிங்களா..
சென்னை: மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரைட்ஸ் (RITES) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 600 சீனியர் டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. டிப்ளமோ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனம் ரைட்ஸ் (RITES). இந்த நிறுவனம் ரயில்வே தொடர்பான ஒப்பந்தங்கள், ஆய்வுகள் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றது. உத்தரபிரதேச மாநிலம் குர்கானை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்குகிறது.

இந்த நிறுவனத்தில் தற்போது ஒப்பந்த அடிப்படையில் 600 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த 14 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. எழுத்துத் தேர்வு 23.11.2025 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன என்பது பற்றிய விரிவான விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
சீனியர் டெக்னிக்கல் உதவியாளர்:
சிவில் - 465
மின்சாரம் - 27
S&T - 08
இயந்திரவியல் - 65
உலோகம் - 13
வேதியியல் - 11 என மொத்தம் 600 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
சிவில் பணியிடங்களுக்கு டிப்ளமோவில் சிவில் இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். அதேபோல, எலக்ட்ரிக்கல் பணிக்கு எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும்.
பணியிடங்களுக்கு தகுந்தவாறு கல்வித் தகுதி மாறுபடும். துறைசார்ந்த பிரிவில் டிப்ளமோ முடித்து இருப்பது அவசியம். சீனியர் டெக்னிக்கல் அஸிஸ்டண்ட் (வேதியியல்) பணிக்கு பிஎஸ்சி முடித்து இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அனைத்து பணியிடங்களுக்கும் அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். அதாவது, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் உண்டு.
சம்பளம்:
தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.29,735/- வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
தகுதியும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பை படித்து உறுதி செய்து கொண்ட பிறகு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், EWS-ஆகிய பிரிவினருக்கு ரூ.100 கட்டணம் ஆகும். விண்ணப்பிக்க வரும் 12.11.2025 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://www.rites.com/Upload/Career/M_61_88_25_advertisement_(1)_pdf-2025-Oct-14-17-15-23.pdf


Click it and Unblock the Notifications
