சென்னை எம்.டி.சியில் வேலை வாய்ப்பு.. டிகிரி முடித்தவர்களுக்கு சான்ஸ்.. அப்ளை பண்ணுவது எப்படி?
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (MTC) அரசு விதிகளின் படி தொழிற் பழகுநர் பயிற்சிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், என்ஜினியரிங், டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்களுக்கான 1 வருட தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (MTC) செயல்படுகிறது. சென்னையில் ஓடும் நகர பேருந்துகள் அனைத்தும் எம்.டி.எசி மூலமாக இயக்கப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்னையில் தினமும் இயக்கப்படுகின்றன.

சென்னை எம்டிசியில் இளம் பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு விதிகளை பின்பற்றி தொழில் பழகுநர் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. அந்த வகையில், என்ஜினியரிங், டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்களுக்கான 1 வருட தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கல்வித் தகுதி:
மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளை கொண்ட டிப்ளமோ மற்றும் என்ஜினியரிங் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஎம் முடித்தவர்களும் விண்ணப்பிக்க முடியும். 2021, 2022, 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் முடித்து தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கொடுக்கப்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாக கல்வி தகுதியை முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்பிப்பது எப்படி?
மேல் குறிப்பிட்ட தகுதிகளை பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் தேசிய அப்ரெண்டீஸ் பயிற்சி திட்டத்தின் இணையதளமான https://nats.education.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தேசிய தொழிற்பயிற்சி திட்டத்தின் இணையத்தில் பதிவு செய்து, மாநகர் போக்குவரத்து கழகத்தின் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications