4 ஆயிரம் பேருக்கு வேலை ரெடி.. ஒரே வருசத்தில் மேஜிக்.. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
சென்னை: பெரம்பலூரில் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய காலணி தொழிற்சாலை ஒரு ஆண்டிலேயே உற்பத்தியை தொடங்க உள்ளது. வரும் 28ம் தேதி காலணி தொழிற்சாலை தொடங்க உள்ளது. இதன் மூலம 4 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழகத்தில் 2022-ம் ஆண்டு காலணி மற்றும் தோல் உற்பத்தி பொருட்கள் கொள்கை வெளியிடப்பட்டது. அதில் இருந்து இதுவரை ரூ.2,250 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

தோல் மற்றும் தோல் அல்லாத காலணி ஏற்றுமதி வர்த்தகத்தில் தேசிய அளவில் 48 சதவீத பங்களிப்பை தமிழகம் கொண்டுள்ளது. தமிழக அரசின் முழு ஆதரவு இருப்பதாலும், நிலத்தேவைகள், உள்கட்டமைப்பு தேவைகள் கிடைப்பதாலும், கம்பெனிகள் தங்கள் உற்பத்தியை மிக விரைவாக தொடங்க முடியும்.
அந்தவகையில், தமிழக அரசிடம் தொடர்பு கொண்ட நாளில் இருந்து ஒரு ஆண்டுக்குள், ஜேஆர் ஒன் கோத்தாரி காலணி நிறுவனம் தனது உற்பத்தியை மிக விரைவில் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதன் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டினார்.
சரியாக ஒரு ஆண்டு கழித்து இந்த மாதம் 28-ந் தேதி அதன் தொடக்க விழா நடைபெறவுள்ளது. இதன் மூலம் 4 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை பெரம்பலூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமைந்துள்ளது. இது, ஒரு தொழிற்சாலை தனது உற்பத்தியை மிகக்குறுகிய காலத்திற்குள் தொடங்க முடியும் என்பதில், அரசுக்கும், நிறுவனங்களுக்கும் இடையே இருக்கும் உறவுக்கு நல்ல உதாரணமாகும்.
தமிழகத்தின் தொழில் முதலீட்டு வழிகாட்டி முகமை, தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில் அங்கீகாரத்துக்கு தேவையான உதவிகளை செய்வது, வர்த்தக சேவைகளை வழங்குவது, இட மதிப்பீடு போன்றவற்றில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தோல் அல்லாத காலணி உற்பத்தி பிரிவை பெருமளவில் வளர்த்தெடுப்பதில் அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது. இதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகும். ஒரு டிரிலியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற முதல்-அமைச்சரின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் இது முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார்" இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications