தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும்! இந்து அறநிலைய துறையில் 42,000 சம்பளத்தில் வேலை.. சென்னையில் பணி
சென்னை: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் காலியாக உள்ள பணியிடங்கள் உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படுகிறது. அந்த வகையில் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அகஸ்தீஸ்வர சுவாமி கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மாதம் 35 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்து மேலும் விவரங்களை இங்கே பார்க்கலாம்.
சென்னை வில்லிவாக்கத்தில் அருள்மிகு அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். சென்னையில் உள்ள பிரபலமான கோயில்களில் ஒன்றாக விளங்கும் இந்தக் கோயிலில், காலியாக உள்ள4 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
சுயம்பாகி: 01
மின் பணியாளர்: 01
பகல்காவலர்: 01
திருவலகு: 01
என மொத்தம் 4 பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
* சுயம்பாகி பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். திருக்கோயில் பழக்க வழக்கங்களின் படி பிரசாதம் தயாரிக்க தெரிந்து இருக்க வேண்டும்.
* மின் பணியாளர் பணிக்கு ஐடிஐ படித்து இருக்க வேண்டும். மின்சார வாரியத்தால் வழங்கப்பட்ட 'பி'சான்றிதழ் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
* பகல் காவலர் மற்றும் திருவலகு பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?: சுயம்பாகி, மின்பணியளர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ 41,800 வரை சம்பளமாக வழங்கப்படும். பகல் காவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ரூ.11,600 முதல் 36,800 வரை சம்பளமாக வழங்கப்படும். திருவலகு பணிக்கு ரூ.10,000 - 31,500 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர் 01.07.2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியான விண்ணப்பதாரர்கள், தபால் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தை திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.tnhrcegov.in- என்ற இணையத்திலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க வரும் 09.12.2024 கடைசி நாளாகும். விண்ணப்ப படிவத்துடன் தேவையான கல்வி சான்றிதழ் நகல்களை அரசு பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறப்பட்டு அனுப்ப வேண்டும். தேர்வு அறிவிப்பினை தேர்வர்கள் இந்து சமய அறநிலையத்துறை இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications