2023ல் பி.இ. முடிக்க போறீங்களா? அப்போ ரூ 1.5 லட்சம் சம்பளத்துடன் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை ரெடி
சென்னை: பிஇ முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் அசத்தலான வேலை வாய்ப்புள்ளது. இதன் மூலம் மாதம் 1.6 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும்.
சிவில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல் போன்ற பாடங்களில் கேட் 2023 தேர்வு மூலம பொறியியல் பட்டதாரிகளைத் தேர்வு செய்ய மத்திய அரசின் மின் இணைப்பு நிறுவனமான பவர் கிரிட் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும்
நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு பணியமர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி காலத்தில் ரூ 40 ஆயிரம் மற்றும் இதர தேவைகளுக்கு இணைத்து ஊதியமாக வழங்கப்படும்.

பணி நியமனம்
பணி நியமனத்திற்குப் பின்பு மாதத்திற்குச் சம்பளமாக ரூ 50 ஆயிரம் முதல் ரூ 1,60,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Engineer Trainee (electrical), Engineer Trainee (eletronic), Engineer Trainee (civil), Engineer Trainee (computer science) ஆகிய பதவிகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.

கடைசி நாள்
இந்த பணிக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 31 ஆம் தேதிபடி 28 வயது இருக்க வேண்டும். ஒரு ஆண்டு பயிற்சி காலத்தில் ரூ 40 ஆயிரம் முதல் ரூ 1.40 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும். பயிற்சி காலம் முடிவடைந்த பின்னர் பணிநியமனம் செய்யப்படும். பணிக் காலத்தில் ஊதியமாக ரூ 50 ஆயிரம் முதல் ரூ 1.60 லட்சம் வரை வழங்கப்படும்.

கல்வி தகுதி
B.E./ B.Tech/ BSc (Engg) டிகிரி பெற்றிருக்க வேண்டும். 14.08.2023 இறுதி தேர்வு முடிவுகளுக்கு காத்திருப்போரும் இறுதி ஆண்டு படிப்போரும் விண்ணப்பிக்கலாம். கேட் 2023 இல் எடுக்கும் மதிப்பெண்கள், குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கேட் 2023 தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்தக்கட்டத்திற்குச் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்
மேலும் விவரங்களுக்கு www.powergrid.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் விண்ணப்பம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பக் கட்டணமாக ரூ 500ஐ ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications