மத்திய அரசின் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை.. மாதம் 50 ஆயிரம் சம்பளம்.. டிகிரி தகுதி தான்
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய இன்சூரன்ஸ் கம்பெனியில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக அதிகாரிகள் (AO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். கல்வித் தகுதி என்ன, எப்போது வரை விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
தேசிய இன்சூரன்ஸ் கம்பெனி (NICL) மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். நிதி அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் இந்த நிறுவனத்தின் தலைமையகம் கொல்கத்தாவில் உள்ளது. நாடு முழுவதும் இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் அமைந்துள்ளன. தேசிய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்களை உரிய அறிவிப்புகள் வெளியிட்டு நிர்ப்பப்படுகின்றன.

அந்த வகையில் தற்போது நிர்வாக அதிகாரிகள் (AO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
டாக்டர்கள் (MBBS)) - 14 பதவிகள்
சட்டம் - 20
நிதி - 21
தகவல் தொழில்நுட்பம் - 20
ஆட்டோமொபைல் பொறியாளர்கள் - 21
ஜெனரலிஸ்ட் - 170 என மொத்தம் 266 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி:
பணியிடங்களின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். மருத்துவர் பணியிடத்திற்கு எம்பிபிஎஸ்/எம்டி/எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளை முடித்து இருக்க வேண்டும்.
* சட்டம் (லீகல்) பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து சட்ட பாட பிரிவில் பட்டம் முடித்து இருக்க வேண்டும். 60 சதவீதத்திற்கு குறைவு இல்லாத மதிப்பெண்களை பெற்று இருக்க வேண்டும்.
* ஃபைனான்ஸ் (நிதி) பணியிடத்திற்கு சிஏ அல்லது பிகாம்,/ எம்.காம் உள்ளிட்ட படிப்புகளை முடித்து இருக்க வேண்டும்.
* ஐடி பணிக்கு பிடெக்/ பி இ/ எம்.டெக்/எம்.இ உள்ளிட்ட படிப்புகளை முடித்து இருக்க வேண்டும் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம்.
* ஜெனரலிஸ்ட் பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி அவசியம்.
வயது வரம்பு
21-வயது நிறைவு அடைந்தவர்களும் 30 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளை பின்பற்றி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
மாதம் ரு.50,925 முதல் சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். இதில் தேர்வர்கள் பெறும் கட் ஆஃப் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையங்களை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்படும்.
தேர்வுக் கட்டணம்:
எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 கட்டணம் ஆகும். இதர பிரிவினருக்கு ரூ.3 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்க வரும் 3.07.2025 கடைசி நாளாகும். தேர்வு நடைபெறும் நாள்; 20.07.202 மற்றும் 31.08.2025 ஆகும்.
தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை ஒருமுறை படித்து தெரிந்து கொள்ளவும். அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படிக்க: https://nationalinsurance.nic.co.in/recruitment
-
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications