மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வேலை காலி இருக்கு.. என்னென்ன தகுதிகள்?சம்பளம் எவ்வளவு தெரியுமா?
உலக புகழ் பெற்ற மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் சமையல்காரர், பிளம்பர் உள்ளிட்ட 19 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகிள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
தாளம், வேதபாராயணம், சமையல்காரர், பிளம்பர் உள்ளிட்ட பதவிகள் காலியாக உள்ளன. இந்து மதத்தினைச் சார்ந்த நபர்களிடமிருந்து ஆகஸ்ட் 18ஆம் தேதி மாலை 5.45 மணிவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாகவும், இந்து மதத்தை பின்பற்றுபவராகவும் தமிழ்நாட்டைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 01.07.2022 அன்று 18 வயது நிறைவடைந்தவராகவும் 35 வயது நிறைவடையாதவராகவும் இருக்க வேண்டும். கருணை இல்லக் காப்பாளர் பதவிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.100/-ஐ திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் வரிசை எண் இட்டு வழங்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேலான பதவிகளுக்கு ஒரே விண்ணப்பத்தில் பூர்த்தி செய்திருந்தால் அந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
ஐடிஐ அல்லது தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும், பணிக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது. சம்பளம் ரூ.18.500 முதல் 58,600 வரை வழங்கப்படும்.மேலும் பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிவிப்பாணையை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
இதர விபரங்கள் மற்றும் நிபந்தனைகளை திருக்கோயில் அலுவலக வேலைநாட்களில் அலுவலக வேலைநேரத்தில் நேரில் வந்து தெரிந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொலைபேசி எண் 0452 234 4360.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications