செவிலியர்கள், லேப் டெக்னீஷியன்கள் பணி.. சென்னை மாநகராட்சி சார்பில் வேலைவாய்ப்புக்கு அழைப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: செவிலியர்கள், லேப் டெக்னீஷியன் உள்பட பல்வேறு பணிகளுக்கு தற்காலிக அடிப்படையில் 11 மாதங்களுக்கு பணியாற்ற சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் நேற்றைய தினம் அறிவிக்கையை வெளியிட்டது. அதில் 9 பணிகளுக்கு மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி செவிலியர்கள், லேப் டெக்னீஷியன், ஆபரேஷன் தியேட்டர் அசிஸ்டென்ட், ஆப்தால்மிக் அசிஸ்டென்ட், எபிடெமியோலாஜிஸ்ட், கணக்கு அதிகாரி, கணக்கு உதவியாளர், டிஇஓ- கணக்காளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆகிய 9 பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Jobs for Staff Nurse in Chennai Corporation

இதில் செவிலியர்கள் பணிக்கு 25 காலிப்பணியிடங்கள் உள்ளன. மாதச் சம்பளமாக ரூ 14 ஆயிரம் வழங்கப்படும். நர்ஸிங் படிப்பில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

லேப் டெக்னீஷியன்- இந்த பணிக்கு 5 காலியிடங்கள் உள்ளன. மாதச் சம்பளமாக ரூ 10 ஆயிரம் வழங்கப்படும். பிளஸ் 2 முடித்துவிட்டு மெடிக்கல் லேப் டெக்னாலஜியில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

ஓடி அசிஸ்டெண்ட்- இந்த பணிக்கு 5 காலிப்பணியிடங்கள் உள்ளன. மாதம் ரூ 8400 சம்பளமாக வழங்கப்படும். பிளஸ் 2 படித்துவிட்டு அறுவை சிகிச்சை டெக்னாலஜியில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

எபிடெமியோலாஜிஸ்ட்- இந்த பணிக்கு ஒரே ஒரு இடம் காலியாக உள்ளது. இதற்கு சம்பளமாக ரூ 47,250 வழங்கப்படும். இந்த பணிக்கு டிபிஎச் அல்லது எம்பிஎச் படித்திருக்க வேண்டும்.

கணக்கு அதிகாரி- இந்த பதவிக்கும் ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இதற்கு மாதந்தோறும் 30ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். பிகாம் அல்லது சிஏ படித்திருக்க வேண்டும். கணினி அறிவுடன் டேலி படித்திருக்க வேண்டும். அரசு துறையில் கணக்கு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கணக்கு உதவியாளர்- இதற்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இதற்கு மாத சம்பளம் ரூ 14 ஆயிரம் வழங்கப்படும். பிகாம் படித்துவிட்டு ஓராண்டு அனுபவம் இருத்தல் வேண்டும்.

டிஐஓ- கணக்காளர் - இந்த பணிக்கு 3 இடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிக்கு மாதம் ரூ 14 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். பிகாம் படித்திருந்து போதிய கணினி அறிவு இருத்தல் வேண்டும்.

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்- இந்த பணிக்கு 4 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு மாத ஊதியமாக ரூ 10,350 வழங்கப்படும். ஓராண்டு அனுபவத்துடன் கணினி அறிவும் ஒரு பட்டப்படிப்பும் இருத்தல் வேண்டும்.

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பணி அமர்த்தப்படுவர். 11 மாதங்கள் மட்டுமே ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவர். பணியாளர்களின் செயல்பாடுகளை பொருத்தும் விதிமுறைகளை பொறுத்தும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படலாம். நேர்காணலில் கலந்து கொள்ள எந்த போக்குவரத்து தொகையும் வழங்கப்படாது.

ஒரு மாத கால அவகாசம் கொடுத்து ஒப்பந்தமானது எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம்.சென்னை மாநகர ஊரக சுகாதார திட்டத்துடன் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். மேற்கண்ட நிபந்தனைகளுக்குள்பட்டு தகுதிகளுக்கு பொருத்தமானவர்கள் அக்டோபர் 7ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படுவோர் வரும் அக்டோபர் 11 ஆம் தேதி நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பங்களை மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மெயில் ஐடி [email protected] என்ற முகவரிக்கு அனுப்பலாம். அல்லது Office of the Member Secretary, CCUHM/City Health Officer, Public Health Department, Greater Chennai Corporation, Rippon Buildings, Chennai -3 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+