சென்னை மாநகராட்சியில் வேலை.. மாதம் 30 ஆயிரம் சம்பளம்! எக்ஸாம் கிடையாது.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: சென்னை மாநகராட்சியில் பொது சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் மையங்களில் 05 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மிகாதவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். கல்வி தகுதி என்ன, பணியின் தன்மை உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
சென்னை பெருநகர மாநகராட்சியின் பொதுசுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் 05 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதாவது ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் ஒப்பந்த காலம் முடிந்த பிறகு எக்காலத்திலும் பதவி நிரந்தரத்திற்கு உரிமை கோர முடியாது.

பணியிடங்கள் விவரம்:
இந்த நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்தின் உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் தன்னார்வலர்கள், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, கன்னமாபேட்டை, மீனம்பாக்கம் மற்றும் சோழிங்க நல்லூர் ஆகிய இடங்களில் உள்ள நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களில் பணியாற்ற வேண்டியிருக்கும்.
கல்வித் தகுதி, வயது வரம்பு:
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி அனுபவம் என பார்த்தால், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் / விலங்குகள் காப்பகம் அல்லது விலங்கு நலம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 45 க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
எப்படி விண்ணப்பிப்பது:
விண்ணப்ப படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்த பிறகு, சமீபத்தில் எடுக்கப்பட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பிறந்த தேதிக்கான சான்றிதழ் (எஸ்.எஸ்.எல்.சி/ 12 ஆம் வகுப்பு சான்றிதழ்), இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றை சுய சான்று அளித்து சமர்பிக்க வேண்டும். வருவாய் துறையிடம் இருந்து பெற்ற குடியிருப்பு சான்றிதழ், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளுடன், கல்வி சான்றிதழ், அனுபவ சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களையும் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 04.07.2025 ஆகும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
City Health Officer,
Public Health Department,
3rd Floor, Amma Maligai
Greater Chennai Corporation,
Ripon Buildings, Chennai -600003.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 08.07.2025
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்க அறிறுத்தப்படுகிறார்கள்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://chennaicorporation.gov.in/gcc/pdf/Applications.pdf
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications