சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை.. 392 பணியிடங்கள்! 8 ஆம் வகுப்பு கல்வி தகுதிதான்.. 58 ஆயிரம் சம்பளம்
சென்னை: தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அலுவலக உதவியாளர், சோப்தார், துப்புரவு தொழிலாளர், தோட்டக்காரர் என மொத்தம் 392 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மாதம் ரூ.58 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கான கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவற்றை இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. 8 ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன் கூடிய இந்த பணியிடங்களுக்கு டிகிரி படித்தவர்கள் கூட பலரும் விண்ணப்பிப்பது வழக்கம். அரசு வேலை என்பதால் பணி பாதுகாப்பு, கை நிறைய சம்பளம் ஆகியவை கிடைக்கும் என்பதால் உயர் நீதிமன்றம் வெளியிடும் இந்த தேர்வு அறிவிப்பு தேர்வர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணியிடங்கள் விவரம்:
1. சோப்தார் - 12
2. அலுவலக உதவியாளர் - 137
3. குடியிருப்பு உதவியாளர் - 87
4. ரூம் பாய் - 04
5. துப்புரவு பணியாளர் - 73
6. தோட்டக்காரர் - 24
7. வாட்டர்மேன் - 02
8. துப்புரவு பணியாளர் - 49
9. வாட்ச்மேன் - 04
என மொத்தம் 392 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
* சோப்தார் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 8 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.
* அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்து இருக்க வேண்டும். இலகு ரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் வைத்து இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமையல், ஹவுஸ் கீப்பிங்கில் அனுபவம் இருந்தால் முன்னுரிமை தரப்படும்.
* குடியிருப்பு உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு கல்வி தகுதி போதும். ஓராண்டு craft course முடித்து இருக்க வேண்டும். ஹவுஸ் கீப்பிங், சமையல், பேக்கரி ஆகிய பிரிவுகளில் முடித்தவர்களுக்கும் தமிழ், ஆங்கிலம் நன்கு தெரிந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் இருந்தாலும் முன்னுரிமை அளிக்கப்படும்.
* இதர பணியிடங்கள் அனைத்திற்கும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதும்.
வயது வரம்பு:
01.07.2025 தேதிப்படி 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 37 ஆகும். அதாவது, 02.07.1988- க்கு பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் என்றால் அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும்.
சம்பளம் எவ்வளவு?:
* சோப்தார் - ரூ.15,700 - 58,100 /-
* அலுவலக உதவியாளர் - ரூ.15,700 - 58,100 /-
* குடியிருப்பு உதவியாளர் - ரூ.15,700 - 58,100 /-
* அறை பணியாளர் - ரூ.15,700 - 58,100 /-
* துப்புரவு பணியாளர் -ரூ.15,700 - 58,100 /-
* தோட்டக்காரர் - ரூ.15,700 - 58,100 /-
* வாட்டர்மேன் - ரூ.15,700 - 58,100 /-
* சுகாதார பணியாளர் - ரூ.15,700 - 58,100 /-
* வாட்ச்மேன் - ரூ.15,700 - 58,100 /-
தேர்வு முறை:
எழுத்து தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது. (https://www.mhc.tn.gov.in/) என்ற இணையதளம் வாயிலாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க அவகாசம்: இன்று 06.04.2025 முதல் 05.05.2025 வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு அறிவிப்பினை படிக்க இங்கே கிளிக் செய்யவும். https://www.mhc.tn.gov.in/recruitment/login
-
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications