மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை.. எக்ஸாம் கிடையாது! 10 ஆம் வகுப்பு தகுதி தான்!
சென்னை: மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள 71 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பதை இங்கு பார்க்கலாம்.
கேரள மாநிலம் கொச்சியில் கப்பல் கட்டும் தளம் உள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான இந்த கப்பல் கட்டும் தளம் கடந்த 1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்திய பாதுகாப்பு படைக்கு தேவையான அதி நவீன கப்பல்களை கட்டுமானம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாட்டில் உள்ள முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்த கப்பல் கட்டும் நிறுவனத்தில் காலியாக உள்ள 71 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. சாரம் அமைப்பவர் (Scaffolder) - 21 பணியிடங்கள்
2. செமி ஸ்கில்டு ரிக்கர் - 50 பணியிடங்கள்.
கல்வி தகுதி: சாரம் அமைப்பவர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும். சாரம் அமைக்கும் பணியில் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும். செமி ஸ்கில்டு ரிக்கர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 4 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பணியில் குறைந்தது மூன்று ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: இரண்டு பணியிடங்களுக்குமே 30-வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்காலம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 13 வயது ஆண்டும் வயது உச்ச வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?: இந்த பணி முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது ஆகும். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு முதலாம் ஆண்டில் ரூ. 22,100/ம், இரண்டாம் ஆண்டில் ரூ. 22,800-ம், மூன்றாம் ஆண்டில் ரூ. 23,400ம் வழங்கப்படும். கூடுதல் பணி நேரம் வேலை செய்தால் ரூ.5,530 முதல் 5,850 வரை கிடைக்கும். மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்.
தேர்வு முறை: செய்முறை தேர்வு, உடல் தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தர்வை ரூ.200 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். https://cochinshipyard.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பபிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 13.11.2024. விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.11.2024 ஆகும்.
விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து அறிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க: https://cochinshipyard.in/careerdetail/career_locations/644
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications