பொதுத்துறை வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்! உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: ஐடிஐபி வங்கியில் 1,000 எக்ஸ்கியூட்டிவ் சேல்ஸ் மற்றும் ஆபரேசன்ஸ் (ESO)- பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.
நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஐடிஐபி. இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் இந்த வங்கியில் அதிக பங்குகளை வைத்துள்ளது. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கிளைகள் இந்த வங்கிக்கு உள்ளன. சுமார் 20 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றும் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாக உள்ளது.

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கியில் காலியாக உள்ள ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: எக்ஸ்கியூட்டிவ் சேல்ஸ் மற்றும் ஆபரேசன்ஸ் (ESO) - 1000 பணியிடங்கள். இந்த பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் , பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், எஸ்சி /எஸ்டி பிரிவினருக்கு 15 ஆண்டுகளும் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?: இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது. முதல் ஆண்டில் 29 ஆயிரமும், இரண்டாம் ஆண்டில் ரூ. 31 ஆயிரமும் வழங்கப்படும். முதல் ஆண்டில் பணியில் திருப்தி ஏற்பட்டால் மட்டும் இரண்டாம் ஆண்டுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்படும். அதன்பிறகு ஒப்பந்த காலம் நீட்டிக்கப்படாது.
எனினும், இரண்டு ஆண்டு காலம் ஒப்பந்த பணியை நிறைவு பெற்றவர்கள் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பணிக்கான தகுதியை பெறுவார்கள். வங்கியின் உரிய விதிகளின்படி தேர்வு முறையை பின்பற்றி இந்த பணியிடம் பிறகு நிரப்பப்படும். இது பற்றிய முழு விவரங்களை கீழே கொடுத்துள்ள தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?: ESO- பணிக்கு தேவையான கல்வி தகுதி மற்றும் இதர தகுதிகள் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கட்டணமாக ரூ. 1050/- செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினர் ரூ. 250 செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். http://www.idbibank. என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 07.11.2024.
விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்: 16.11.2024.
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மெடிக்கல் டெஸ்ட்டும் நடைபெறும். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைறும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, ஈரோடு, நாகர் கோவில், சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.idbibank.in/pdf/careers/ESO-2025-26.pdf
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
IT Jobs: நாளை இண்டர்வியூ.. எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications