ரயில்வே கழகத்தில் வேலை.. 98 பணியிடங்கள்.. என்ஜினியரிங் முடிச்சிருக்கீங்களா.. விட்றாதீங்க
டெல்லி: மத்திய அரசு நிறுவனமான ரயில்வே கார்ப்பரேஷன் கழகத்தில் காலியாக உள்ள 98 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்ஜினீயரிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1.60 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் (NHSRCL) என்பது மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமாக இது செயல்படுகிறது. நாட்டில் உள்ள அதிவேக ரயில்வே வழித்தடங்களை அமைத்தல் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த கழகம் உருவாக்கப்பட்டது.

டெல்லியை தலைமையிடமாக கொண்டு இது இயங்குகிறது. மத்திய அரசு நிறுவனமான ரயில்வே கார்ப்பரேஷன் கழகத்தில் காலியாக உள்ள 98 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* சிவில் -35
*எலக்ட்ரிக்கல் - 17
* (SNT) - 03
* RS-04
* Architecture - 08
* உதவி தொழில்நுட்ப மேலாளர் (Database Administrator) - 01
* உதவி மேலாளர் (கொள்முதல்) - 01
* பொது மேலாளர் (General)- 02 என மொத்தம் 98 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி:
பிஇ, பிடெக் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்கலாம். துறை சார்ந்த பிரிவில் என்ஜினியரிங் பிரிவை எடுத்து படித்து இருக்க வேண்டும். அதாவது சிவில் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் சிவில் என்ஜினியரிங் படித்து இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவமும் அவசியம்.
அசிஸ்டண்ட் மேனேஜர் (கொள்முதல்) பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் முடித்து இருந்தால் போதும். அனுபவம் தேவையில்லை. அதேபோல உதவி மேலாளர் பணிக்க்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருந்தால் போதும். புதுடெல்லியில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
வயது வரம்பு:
31.03.2025 தேதிப்படி 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்.சி /எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
தேர்வு முறை:
கணினி வழியிலான ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதார்ர்கள் www.nhsrcl.in என்ற இணையதளம் வயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படித்து கொள்வது அவசியம்.
சம்பளம் எவ்வளவு?
* ஜூனியர் மேனேஜர்: ரூ.40,000 - 1,40,000/-
* அசிஸ்டண்ட் டெக்னிக்கல் மேனேஜர்: ரூ.50,000 - 1,60,000/-
மும்பை - அகமதாபாத் புல்லெட் ரயில் திட்ட பணிக்காக இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்கள் அனைத்தும் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையிலானது ஆகும். 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க வாய்ப்புள்ளது. விண்ணப்பிக்க வரும் 24.04.2025- கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://nhsrcl.in/sites/default/files/notice/2025-03/Final%20Vacancy%20Notice%2004-2025.pdf
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications