பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை.. டிகிரி முடித்த இளைஞர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. ரெடியா?
சென்னை: மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 60 இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது மொத்தம் 2,700 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. நாடு முழுக்க உள்ள பஞ்சாப் கிளைகளில் மாநில வாரியாக நிரப்பப்பட உள்ள பயிற்சி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 60 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொருத்தவரை 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின்படி ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?: இந்த பயிற்சி பணியிடங்கள் ( Apprentice) முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் ஆனது.. ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்க்கு சம்பளமாக மெட்ரோ நகரங்களில் மாதம் ரூபாய் 15,000மும், பிற நகரங்களில் மாதம் 12 ஆயிரமும் வழங்கப்படும். ஊரக பகுதிகளில் 10 ஆயிரம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் தகுதியும் உள்ள தேர்வர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒரு முறை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும். ஆன்லைன் தேர்வு முறை, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யபடுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்ப கட்டணமாக பொது/ ஒபிசி பிரிவினருக்கு ரூ.944ம், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 708 -ம், பெண்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.472 ரூபாயும் செலுத்த வேண்டும். விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.pnbindia.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 14.07.2024 கடைசி நாளாகும்.. ஆன்லைன் விண்ணப்ப தேர்வு வரும் 28 ஆம் தேதி நடைபெறும்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications