வங்கியில் அதிகாரி ஆகணுமா.. புதிதாக 4,455 பணியிடங்கள்! டிகிரி முடிச்சவங்களுக்கு யோகம்.. விட்றாதீங்க
சென்னை: பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள (Probationary Officer PO) / மேனேஜ்மேண்ட் டிரெய்னி (MT) ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 4,455 பணியிடங்களை நிரப்ப ஐபிபிஎஸ் அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் வங்கி வேலைகளுக்கு என தனி மதிப்பு, மரியாதை சமூத்தில் உள்ளது. கை நிறைய சம்பளம், சலுகைகள், கவுரமான வேலை உள்ளிட்டவைகளில் வங்கிகளில் பணியாற்ற வேண்டும் என்பது வேலை தேடுபவர்களின் பெரும் கனவாக உள்ளது. தமிழகத்தில், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு அடுத்தபடியாக தேர்வர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் தேர்வு அறிவிப்புகளில் ஒன்றாக ஐபிபிஎஸ், வங்கி பணிகளுக்காக வெளியிடும் அறிவிப்பு உள்ளது.

எஸ்.பி.ஐ தவிர்த்து பிற பொதுத்துறை வங்கிகளில் காலியாக இருக்கும் இடங்கள் ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் மூலமே நிரப்பப்படுகின்றது. அண்மையில் வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. தற்போது, பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள (Probationary Officer PO) / மேனேஜ்மேண்ட் டிரெய்னி (MT) ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4,455 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* பேங்க் ஆஃப் இந்தியா- 885
* கனரா வங்கி - 750
* சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா - 200
* இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 260
* பஞ்சாப் நேஷனல் வங்கி - 200
* பஞ்சாப் & சிந்து வங்கி - 360
என மொத்தம் 4,455 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: இரண்டு பணியிடங்களுக்குமே ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. வயது வரம்பை பொறுத்தவரை 01.08.2024- தேதிப்படி 20 வயது முடிந்தவர்களும் 30 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்ப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை: முதன்மை தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட தகுதிகள் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரு.850 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/ மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.175 கட்டணம் ஆகும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படிக்கவும். https://www.ibps.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 21.08.2024 கடைசி நாளாகும். தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்ப பதிவில் தேர்வு எழுத விருப்பம் உள்ள இடங்கள் உள்ளிட்டவற்றை கவனமாக தேர்வு செய்யவும். கவனக்குறைவாக தேர்வு செண்டர்களை தேர்வு செய்தால் தொலை தூரங்களில் தேர்வு மையம் ஒதுக்க வாய்ப்பு உள்ளது.
தேர்வு எப்போது?: முதல் நிலைத் தேர்வு அக்டோபர் மாதமும், அதில் தேர்வு செய்யப்படுவோருக்கான முதன்மைத் தேர்வு வரும் நவம்பர் மாதமும் நடைபெறும். நேர்முகத்தேர்வு ஜனவரி / பிப்ரவரியில் நடைபெறும்.
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில் / கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி நெல்லை, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் நடைபெறும். தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள இந்த லிங்கை https://www.ibps.in/wp-content/uploads/Detailed-Notification_CRP-PO-XIV_final-1.pdf கிளிக் செய்யவும்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications