எக்ஸாம் கிடையாது.. 62 ஆயிரம் வரை சம்பளம்.. ஊரக வளர்ச்சி துறையில் வேலை.. விண்ணப்பிக்க ரெடியா

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ரெக்கார்டு கிளர்க் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ரெக்கார்டு கிளர்க், ஜீப் டிரைவர் என மொத்தம் 39 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.

 Jobs in Pudukkottai district 39 Office Assistant Posts how to apply full details

காலிப்பணியிடங்கள் விவரம்:

* ஆவுடையார் கோவில் பிளாக்:
அலுவலக உதவியாளர் - 02 ,
ரெக்கார்டு கிளர்க் - 01

* மனமேல்குடி பிளாக்:
அலுவலக உதவியாளர் - 03
ரெக்கார்டு கிளர்க் - 01
நைட் வாட்ச்மேன் - 01

* திருமயம் ப்ளாக்:
அலுவலக உதவியாளர் - 02
ரெக்கார்டு கிளர்க் - 01
நைட் வாட்ச்மேன் - 01

* பொன்னமரவதி பிளாக்:
அலுவலக உதவியாளர் - 02
ரெக்கார்டு கிளர்க் - 01
நைட் வாட்ச்மேன் - 01

* கரம்பக்குடி பிளாக்:
டிரைவர் - 01
அலுவலக உதவியாளர் - 03
ரெக்கார்டு கிளர்க் - 01

* விராலிமலை பிளாக்: நைட் வாட்ச்மேன்: 01
* திருவரன்குளம் பிளாக்: அலுவலக உதவியாளர் : 01

* அறந்தாங்கி பிளாக் மற்றும் புதுக்கோட்டை பிளாக்: அலுவலக உதவியாளர் 01
* ஊரக வளர்ச்சி துறை பஞ்யாத் ராஜ் துறை புதுக்கோட்டை: ஓட்டுநர் - 02, நைட் வாட்ச்மேன் - 03
அலுவலக உதவியாளர் - 09 என மொத்தம் 39 பணியிடங்கள் நிரப்படுகின்றன.

வயது வரம்பு & சம்பளம்: 18 வயது நிரம்பியவர்களும் 32 வயது பூர்த்தி அடையாதவர்களும் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை அலுவலக உதவியாளர் மற்றும் நைட் வாட்ச்மேன் பணியிடத்திற்கு ரூ.15,700-50,000 வரையும், ஜீப் டிரைவர் பணிக்கு ரூ.19,500-62,000- வரையும் சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி: அலுவலக உதவியாளர் மற்றும் ரெக்கார்டு கிளர்க் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஜீப் டிரைவர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் 5 ஆண்டு ஓட்டுநராக பணி புரிந்த அனுபவம் அவசியம். நைட் வாட்ச்மேன் பணிக்கு எழுத படிக்க தெரிந்தால் போதும்.

தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வின் அடிப்படையில் பணியாளர் தேர்வு நடைபெறும். விண்ணப்பங்களை பொறுத்தவரை தபால் அலுவலகம். புதுக்கோட்டை மாவட்ட இணையதளமானஎன்பதில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்யலாம்.

விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்பிக்க வரும் 31.01.2024- கடைசி நாளாகும். தேர்வு குறித்த அறிவிப்பு மற்றும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி ஆகியவற்றை தெரிந்து கொள்ள https://pudukkottai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+