மொத்தம் 16 காலியிடங்கள்.. திண்டுக்கல் மாவட்டத்தில் பணி.. ரூ 15 ஆயிரம் சம்பளம்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி வேலைவாய்ப்புகள் குறித்து அறிவிக்கை இன்று வெளியானது. அதன்படி மொத்தம் 16 காலியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

திண்டுக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சியில் இரவுக் காவலர், அலுவலக உதவியாளர் மற்றும் பதிவுறு எழுத்தர் பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது.

Jobs in Tamilnadu Rural Development in Dindigul district

எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை வரும் ஜனவரி 18-ஆம் தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இரவுக்காவலர் பணிக்கு எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதிவுறு எழுத்தர் பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது தகுதி பொருத்தமட்டில் பொது பிரிவு விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்சம் 30 வரை இருத்தல் வேண்டும்.

இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணியமர்த்தப்படுவார்கள்.

இரவுக் காவலர் பணிக்கு இரு காலியிடங்களும் அலுவலக உதவியாளர் பணிக்கு 13 இடங்களும் பதிவுறு எழுத்தர் பணிக்கு 1 இடமும் உள்ளது. இரவுக் காவலர், அலுவலக உதவியாளர் பணிகளுக்கு ரூ 15,700 ஊதியமாகவும் பதிவுறு எழுத்தர் பணிக்கு ரூ 15,900 ஊதியமாகவும் அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு dindigul.nic.in என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+