ஐடிஐ படித்தவர்களுக்கு செம சான்ஸ்.. ரூ.71,000 வரை சம்பளம்.. தமிழக அரசின் அச்சு துறையில் வேலை
சென்னை: சென்னை அண்ணாசாலையில் அமைந்து இருக்கும் தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே காணலாம்.
தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலகம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசிதழ்கள் / சிறப்பு வெளியீடுகள், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் நடவடிக்கைக் குறிப்புகள், பல்வேறு சட்டமன்ற குழுக்களின் அறிக்கைகள், வரவு செலவு திட்ட ஆவணங்கள்அதிரகசிய பணிகள், தேர்தல் படிவங்கள், பதிவேடுகள், கையேடுகள் மற்றும் வாக்குச் சீட்டுகள், தமிழ்நாடு மாநில கணக்காய்வுத் தலைவரின் அறிக்கைகள் உள்ளிட்ட அரசின் பல முக்கிய ஆவணங்கள் இங்குதான் பிரிண்ட் ஆகின்றன. இந்த அச்சு அலுவலக்த்தில் காலியாக உள்ள 24 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்கள் விவரம்: ஜூனியர் மெக்கானிக் (01), ஜூனியர் எலக்ட்ரிஷியன் (01), அஸ்சிஸ்டண்ட் ஆஃப்செட் மெஷின் டெக்னிஷியன் (19), சிறப்பு மொழி டிடிபி ஆபரேட்டர் (01). டைம் கீப்பர் (02) என மொத்தம் 24 பணியிடங்கள் நிரப்படுகின்றன.
கல்வி தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்புடன் பணியிடங்கள் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ படித்து இருக்க வேண்டும். சிறப்பு மொழி டிடிபி ஆபரேட்டர் பணிக்கு பிசிஏ அல்லது பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட டிகிரியுடன் டைப் ரைட்டிங் திறனும் அவசியம். டைம் கீப்பர் பணிக்கு பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்து இருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 32 வயதுக்கு உள்பட்டோர் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உள்ளன. பிசி, எம்.பி உள்ளிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 34 ஆகவும் , எஸ்.சி/எஸ்.டி ஆகிய பிரிவினருக்கு 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்: ஜுனியர் மெக்கானிக், எலக்ட்ரிஷியன், ஆஃப்செட் மெஷின் டெக்னிஷியன் ஆகிய பணியிடங்களுக்கு மாதம் ரூ.19,500 - 71,900 - வரை சம்பளம் கிடைக்கும். டிடிபி ஆபரேடர் பணிக்கு ரூ.35,600 - 1,30,800 வரையும் , டைம் கீப்பர் பணிக்கு ரூ.18,200 - 67,100 வரையும் சம்பளமாக கிடைக்கும்.
தேர்வு முறை: எழுத்துதேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதார்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை குறிப்பிட்டு சுய விவரங்கள் மற்றும் தேவையான கல்வி தகுதிகளுக்கான சான்றிதழ் நகல் ஆகியவற்றையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
எழுதுபொருள் (ம) அச்சுத்துறை ஆணையரகம்
11, அண்ணா சாலை, சென்னை-2
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் 31.01.2024 ஆகும் . தேர்வு அறிவிப்பை படிக்க இங்கே http://www.stationeryprinting.tn.gov.in/pdf/B2-21429-2023.pdf கிளிக் செய்யவும்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications