ஒரே வருஷத்தில் உங்க வாழ்க்கையே மாறிடும்.. சார்ஜாவில் வேலை! கைநிறைய சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளிநாடுகளில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்பாடு செய்து தருகிறது. அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜாவில் பணியாற்ற, ஸ்டீல் ஸ்ட்ரக்சுரல் ஃபேப்ரிகேட்டர், சிஎன்சி லேசர் கட்டிங் மெஷின் புரோகிராமர் மற்றும் ஆபரேட்டர், போர்க் லிப்ட் மற்றும் ஜேவிசி ஆபரேட்டர், பிரெஸ் டால் மற்றும் ஷீட் மெட்டல் டை மேக்கர், மார்க்கெட்டிங் இன்ஜினீயர், புரொடக்சன் இன்ஜினீயர் , ஏசி டெக்னீசியன் ஆகிய பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார்.

OMCL என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மூலம் வேலைநாடும் இளைஞர்களுக்கு அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் அமைப்பாக செயல்படுகிறது.

jobs tamil nadu government chennai

போலி முகவர்களை நம்பி வேலை தேடிசென்று யாரும் ஏமாறக்கூடாது என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்ல உதவுகிறது. வெளிநாடுகளில் உள்ள சரியான பணிக்கு குறிப்பிட்ட நபர் தகுதி பெற்றால், அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமே செய்து தருகிறது. அதேபோல் தேவைப்பட்டால் வேலைக்கு தேவையான பயிற்சிகளையும் வழங்குகிறது. அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜாவில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜாவில் பணியாற்ற, ஸ்டீல் ஸ்ட்ரக்சுரல் ஃபேப்ரிகேட்டர், சிஎன்சி லேசர் கட்டிங் மெஷின் புரோகிராமர் மற்றும் ஆபரேட்டர், போர்க் லிப்ட் மற்றும் ஜேவிசி ஆபரேட்டர், பிரெஸ் டால் மற்றும் ஷீட் மெட்டல் டை மேக்கர், மார்க்கெட்டிங் இன்ஜினீயர், புரொடக்சன் இன்ஜினீயர் , ஏசி டெக்னீசியன் உட்பட பல்வேறு தொழில்நுட்ப பதவிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர்.

பதவிக்கு ஏற்ப கல்வித் தகுதி ஐடிஐ தேர்ச்சி, பாலிடெக்னிக் டிஎம்இ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறைந்தபட்சம் 6 ஆண்டு பணி அனுபவம் அவசியம். வயது 28 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். ஊதியத்துடன் உணவு, இருப்பிட வசதி ஆகியவையும் உண்டு. மேலே குறிப்பிடப்பட்ட பணிகளுக்கு செல்வோர் விசா கிடைத்த பின்னர் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்துக்கு சேவை கட்டணமாக ரூ.35,400 மட்டும் செலுத்த வேண்டும்.

உரிய கல்வித் தகுதியும் பணி அனுபவமும் உடைய ஆண்கள் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவரம் அடங்கிய விண்ணப்ப படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ், பாஸ்போர்ட் நகல் ஆகியவற்றை ஏப்ரல் 25-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இப்பணிகளுக்கான நேர்காணல் மே 3, 4 ஆகிய தேதிகளில் காலை 9 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள (பேருந்து நிலையம் அருகில்) ஒருங்கிணைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்துக்கு அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும். கூடுதல் விவரங்களை www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும், 95662-9685 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்" என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+