அரசு பள்ளி மாணவர்களுக்கு தித்திப்பான உத்தரவு.. தமிழ் வழியில் படித்தால் சூப்பர் வாய்ப்பு.. அரசாணை
சென்னை: தமிழ் வழியில், அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என்று தமிழ்நாடு அரசு இன்று (வெள்ளிக்கிழமை) அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் நோக்கத்துடன், 2010ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதி 20% இட ஒதுக்கீடு திட்டம் கொண்டுவரப்பட்டது.
முழுக்க, முழுக்க தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் இந்த 20% இட ஒதுக்கீடு கிடைக்கும்படி சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது . அதன்படியே கடந்த 2020ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சட்டத் திருத்தம் செய்தது.

உயர்நீதிமன்றம்
இந்தச் சட்டத் திருத்தத்தை 20.01.2020 அன்று வெளியிடப்பட்ட டிஎன்பிஎஸ்சி முதல் தொகுதி பணிக்கான போட்டித் தேர்விலிருந்தே செயல்படுத்தும்படி 22.03.2021 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த தீர்ப்பின் அடிப்படையில், புதிய வழிகாட்டு விதிகளைத் தமிழக அரசும் வெளியிட்டது.

20சதவீதம் இடஒதுக்கீடு
தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு விதிகளின்படி அரசின் எந்த வேலைவாய்ப்பாக இருந்தாலும் அதற்கான அதிகபட்சக் கல்வித் தகுதியை ஒன்றாம் வகுப்பிலிருந்து தமிழ் வழியில் படித்தவர்கள் மட்டும்தான் 20% இட ஒதுக்கீட்டைப் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

அரசு பள்ளி
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்றது. திமுக அரசு ஆளுநர் அறிவிப்பில், தமிழ் வழியில், அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என்று கூறியிருந்தது.

சுழற்சி முறை
இதன்படியே முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், "அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்கள், கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள்,போரில் உடல் தகுதியை இழந்த ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகள், கலப்புத் திருமண தம்பதியர் ஆகியோருக்கு அரசுப்பணிகளில் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications