ரூ.58,500 சம்பளத்தில் அரசு வேலை.. எட்டாம் வகுப்பு படித்தால் போதும்.. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
சென்னை: சென்னை புழல் சிறையில் 58500 சம்பளத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை காலியாக உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். புழல், மத்திய சிறையில் காலியாக உள்ள சமையலர், லாரி ஓட்டுனர் மற்றும் நெசவு போதகர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.09.2024க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைக்கு அரசு பணியில் சேர வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. ஆனால் அரசு பணியில் பல லட்சம் பேர் ஒரே நேரத்தில் போட்டியிடுகிறார்கள். அரசு பணியை பொறுத்தவரை நிலையான ஊதியம் , நிரந்தரமான வேலை என்று இருப்பதால் மக்களுக்கு அதன் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் அரசு பணியில் நல்ல சம்பளமும் பல பணியிடங்களுக்கு வழங்கப்படுகிறது. அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு வீட்டுக் கடன் உள்பட பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. வங்கிகள் போட்டி போட்டு கொண்டு கடன் கொடுக்கின்றன. அரசு பணியில் இருப்பவர்களுக்கு திருமணமும் எளிதாக அமைகிறது. எனவே அரசு பணியில் தான் பாதுகாப்பான பணி என்று மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. தமிழ்நாடு அரசு டிஎன்பிசி மூலம் அடுத்த 18 மாதங்களில் பல ஆயிரம் பேரை எடுக்க உள்ளது.

வங்கியில் போட்டி போட்டு கொண்டு கடன் கொடுக்கின்றன. அரசு பணியில் இருப்பவர்களுக்கு திருமணமும் எளிதாக அமைகிறது. எனவே அரசு பணியில் தான் பாதுகாப்பான பணி என்று மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. தமிழ்நாடு அரசு டிஎன்பிசி மூலம் அடுத்த 18 மாதங்களில் பல ஆயிரம் பேரை படிக்க எடுக்க உள்ளது.
ஒவ்வொரு மாதமும் டிஎன்பிஎஸ்சி புதிதாக அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறது. இந்த சூழலில் சென்னை புழல் சிறையில் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விவரங்களை தற்போது பார்ப்போம்.
பணியின் பெயர்: சமையலர்,
காலியிடம் : ஒன்று
சம்பளம்: ரூ.15900 முதல் 58,500 வரை சம்பளம் கிடைக்கும்.
18 வயது முதல் 34 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சமையலர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி உடன் சமையல் பணியில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்: லாரி ஓட்டுநர், காலியிடம் ஒன்று
லாரி ஓட்டுநர் பணியிடத்திற்கு மாதம் 19500 ரூபாய் முதல் 71,900 வரை ரூபாய் சம்பளம் கிடைக்கும்.
குழல் சிறையில் லாரி ஓட்டுநர் பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி உடன் கனரக வாகனம் இயக்கும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: நெசவு போதகர்
சென்னை புழல் சிறையில் நெசவு போதகர் பணியிடத்திற்கு மாத சம்பளமாக 19500 முதல் 71, 900 வரை சம்பளம் கிடைக்கும் .
நெசவு போதகர் பணியிடத்திற்கு வயது வரம்பை பொருத்தவரை 18 வயது முதல் 32 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நெசவு போதகர் பணியிடத்திற்கு கல்வி தகுதியை பொருத்தவரை தமிழ்நாடு அரசின் கைத்தறி நெசவுத் துறையின் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும் .
சென்னை புழல் சிறையில் சமையலர், லாரி ஓட்டுநர், நெசவு போதகர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணப்பிக்கும் முறை குறித்துப் பார்ப்போம். www.chennai.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் அல்லது ஏ4 அளவு வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு செப்டம்பர் 13-ஆம் தேதியான நாளைக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய தபால் முகவரி: சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை - 1, புழல், சென்னை - 66, தொலைபேசி : 044-26590615.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. சென்னையில் மார்ச் 28ல் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க -
IT Jobs: நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ.. சென்னை HCL நிறுவனத்தில் வேலை ரெடி.. சூப்பர் சான்ஸ் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications