காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ்
சென்னை: தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சமுதயா வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வித்தகுதி என்ன என்பது பற்றிய விவரங்களை காணலாம்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு பெற்றுத் தருதல் மற்றும் வாராக்கடன் வசூல் செய்தல், நிதிகல்வி அளித்தல், காப்பீடு திட்டங்களின் சேவைகள் வழங்குதல், மின்னணு நிதி சேவை வழங்குதல், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தனிநபர் தொழில்கடன் பெற வழிவகை செய்தல் ஆகிய பணிகள் நிரப்பப் பட உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம், வட்டார இயக்க மேலாண்மை அலகுகளில் 39 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றனர். அதாவது, (காஞ்சிபுரம்-4. குன்றத்தூர்-12, திருப்பெரும்புதூர்-8, உத்திரமேரூர்-15) சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள்(CBC) பணியிடங்களுக்கு கீழ்கண்ட விவரங்கள் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளருக்கான(CBC)தகுதி விவரம்
* ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சார்ந்த பெண் சுயஉதவிக்குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
* சுய உதவிக்குழு ஊக்குநராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.
* சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர் சமுதாயம் சார்ந்த அமைப்பு பணியாளராகவோ அல்லது தனியார் நிறுவனங்களில் முழு நேரப்பணியாளராக பணி இருத்தல் கூடாது.
* தேர்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினர் பணிபுரியும் ஊராட்சியை சார்ந்தவரக இருப்பது அவசியம்.
* மலைப்பகுதியிலுள்ள ஆதிவாசிகள் குடியிருப்புகளில் மேற்கூறிய உறுப்பினர் இல்லாத நிலையில் ஆண் உறுப்பினரை மாவட்ட ஆட்சித்தலைவரின் சிறப்பு ஒப்புதலுடன் தேர்வு செய்யலாம்,
கணினி திறன்
* விண்ணப்பிக்கும் நாளில் 35 வயதுக்கு கீழ் இருத்தல் வேண்டும்.
* 12-வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாக எழுதப் படிக்கவும் மற்றும் கணக்கிடும் திறன் உடையவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
* வாராக்கடன் உள்ள குழுவின் உறுப்பினராக இருக்க கூடாது.
* மலைப்பகுதிகளில் 12-வது வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்கள் இல்லாத நிலையில் 10-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதர தகுதிகளுடன் இருப்பின் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதியுடன் தகுதியுடையவர்களாக கருதப்படலாம்.
* தகவல் தொடர்பு திறன் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.
* வங்கிகளுக்குச் சென்று பரிவர்த்தனைகள் செய்தும் கடன் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தும் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
* கணினி திறன் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் உள்ள இரு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
* ஆண்ட்ராய்டு (Android) கைபேசி வைத்திருப்பவர்களாகவும் அதை இயக்கி குறுந்தகவல் (SMS) மற்றும் Whatsapp-ல் செய்தி அனுப்பவும் மற்றும் செயலி இயக்கும் திறன் பெற்றவர்களாகவும் இருத்தல் அவசியம்.
சம்பளம் எவ்வளவு?
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திலிருந்து மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு விடுவிக்கப்படும் மாதாந்திர அடிப்படை மதிப்பூதியம் ரூ.2,500/-ஐ சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் சார்ந்துள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் வழங்கப்படும்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள். 03.06.2026.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
இணை இயக்குநர்/திட்ட இயக்குநர்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
மகளிர் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் (or) -dpium [email protected]
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடத்திற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 03.06.2026-க்குள் அனுப்பி பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேற்கண்ட தகவல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ்












Click it and Unblock the Notifications