மாதஊதியம் ரூ.20000.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு! காஞ்சிபுரத்தில் எல்ஏடிசிஎஸ் பணி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டென்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்பட காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 8 ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
தமிழ்நாட்டில் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்புகள் மாவட்ட வாரியாக தற்போது வெளியாகி உள்ளன.

அதன்படி இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆபிஸ் அசிஸ்டென்ட் /கிளர்க்(Office Assistant/Clerk), ரிசப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்), ஆபிஸ் பியூன் பணிகள் நிரப்பப்பட உள்ளது.
இதில் ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் கம்யூட்டர் அறிவு பெற்றிருப்பதோடுநிமிடத்துக்கு 40 எழுத்துகள் டைப் செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும். ரிசப்ஷன் கம்ப் டேட்டா என்ட்ரி பணிக்கு விண்பண்பம் செய்வோர் டிகிரி முடித்திருப்பதோடு, நல்ல உரையாடல் திறன் கொண்டிருக்க வேண்டும். டெலிபோன், பேக்ஸ், ஸ்வீட்ச் போர்டு கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும். அதோடு டைப்பிங் திறமையும் இருக்க வேண்டும். ஆபிஸ் பியூன் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 8 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு தாங்கள் பணியாற்றும் நகரை பொறுத்து சம்பளம் வழங்கப்படும். மக்கள்தொகையின் அடிப்படையில் நகரங்கள் கிளாஸ் ஏ, கிளாஸ் பி, கிளாஸ் சி பிரிக்கப்பட்டுள்ளன. கிளாஸ் ஏ நகரில் பணியாற்றுவோருக்கு அதிக சம்பளமும், கிளாஸ் சி நகரில் பணியாற்றுவோருக்கு அதனை விட குறைவாக சம்பளமும் வழங்கப்படும். அதன்படி பார்த்தால்

ஆபிஸ் அசிஸ்டென்ட்/கிளர்க், ரிசப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். ஆபிஸ் பியூன் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.14 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு வரும் 16ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்பும்போது படிப்பு சான்றிதழ்களுடன், பிற ஆவணங்களை இணைத்து தபாலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை Chairman/Principal District Judge, District Legal Services Authority, ADR Building, Chengalpattu, Pin - 603 011 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் முதன்மை நீதிபதி மற்றும் செசன்ஸ் நீதிபதியின் தலைமையிலான குழுவினரால் தேர்வு செய்யப்படுவார்கள். தற்போதைய அறிவிப்பின்படி ஆபிஸ் அசிஸ்டென்ட் /கிளர்க்(Office Assistant/Clerk), ரிசப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்), ஆபிஸ் பியூன் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் 2 ஆண்டுகள் வரை பணிக்கு அமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு செயல்பாட்டை பொறுத்து பணி நீட்டிப்பு என்பது வழங்கப்படும்.
பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications