தமிழகத்தில் மத்திய அரசு பணி.. எழுத்து தேர்வு இன்றி மாத சம்பளம் ரூ.60,000.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: எழுத்து தேர்வு இன்றி ரூ.60,000 சம்பளத்தில் தமிழகத்தில் மத்திய அரசு பணியில் சேர வாய்ப்பு உருவாகி உள்ளது. டிகிரி, டிப்ளமோ, என்ஜினியரீங் முடித்த அனைவரும் விண்ணப்பித்து பயன்பெற முடியும்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் CSIR(இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி ஆய்வு நிறுவனம்) - CECRI (மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிலையம்) அமைந்துள்ளது.
இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
காரைக்குடியில் உள்ள CSIR-CECRIல் Project Associate - I, Project Co-ordinator - I ஆகிய பணியிடங்களுக்கு மொத்தம் 19 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் Project Associate- I பணிக்கு 18 பேரும், Project Co Ordinator - I பணிக்கு ஒருவர் என மொத்தம் 19 பேர் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி தகுதி என்ன?
Project Associate - I பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் வேதியியல் / இயற்பியல் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிடெக்கில் பயோ டெக்னாலஜி, பிஇ-பிடெக்கில் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரீங், அல்லது எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிஎஸ்சி டிகிரியில் எலக்ட்ரானிக்ஸ், டிப்ளமோவில் EEE அல்லது ECE அல்லது மெக்கானிக்கல் முடித்தவர்கள் விண்ணப்ப முடியும். Project Co-ordinator - I பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் Metallurgical Engineering / Metallurgical and Materials Science Engineering பிரிவில் P.hd முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு?
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 50க்குள் இருக்க வேண்டும். தற்காலிக பணி என்பதால் Project Associate - I பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியமாக(Stipend) ரூ.31,000, Project Co-ordinator - Iக்கு ரூ.60,000(Stipend) கிடைக்கும். இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு எழுத்து தேர்வு கிடையாது. நேர்க்காணல் முறையில் மட்டுமே விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

3 நாள் நேர்க்காணல்
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கு உரிய முறையில் பூர்த்தி செய்து கல்வித் சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் நேர்க்காணலில் நேரடியாக பங்கேற்கலாம். நேர்க்காணல் அக்டோபர் 18 முதல் அக்டோபர் 21 வரை 3 நாட்கள் ஒவ்வொரு பணிக்கு தனித்தனியே குறிப்பிட்ட நேரத்தில் நடைபெற உள்ளது. நேர்க்காணல் CSIR - CECRI,,COLLEGE,ROAD, KARAIKUDI-ல் நடக்க உள்ளது.
பணி தொடர்பான கூடுதல் விபரங்களை காண Click Here
விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய Click Here
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா?












Click it and Unblock the Notifications