கைநிறைய சம்பளம்! கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் காத்திருக்கும் அசத்தலான வேலை! நாளை கடைசி நாள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கோவை உள்பட கொங்கு மாவட்டங்களில் உள்ள சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8 ம் வகுப்பு முடித்தவர்கள், டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு நாளை மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களுக்கு உதவி செய்யும் வகையில் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பானது தமிழ்நாட்டில் சட்ட சேவைகள் ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

 LADCS recruitment 2023 for office Assistant and Data Entry operator for Coimbatore and other Kongu districts

இந்நிலையில் தான் மாவட்ட சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்நாட்டில் கொங்கு மாவட்டங்களாக உள்ள கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரிகளில் காலியாக உள்ள 3 பிரிவுகளுக்கு தேவையான ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. மொத்தம் 32 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:

கோவை-திருப்பூர்: கோவை மாவட்டத்தை பொறுத்தமட்டில் ஆபிஸ் அசிஸ்டென்ட்/ கிளர்க் பணிக்கு 3 பேர், ரிஷப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்), ஆபிஸ் பியூன் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் ஆபிஸ் அசிஸ்டென்ட்/கிளர்க் பணிக்கு 3 பேர், ரிஷப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்), ஆபிஸ் பியூன் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நீலகிரி-நாமக்கல்: நீலகிரி மாட்டத்தில் ஆபிஸ் அசிஸ்டென்ட்/ கிளர்க் பணிக்கு 2 பேர், ரிஷப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்), ஆபிஸ் பியூன் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் ஆபிஸ் அசிஸ்டென்ட்/ கிளர்க், ரிஷப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்), ஆபிஸ் பியூன் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கரூர்-ஈரோடு: கரூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் ஆபிஸ் அசிஸ்டென்ட்/ கிளர்க், ரிஷப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்), ஆபிஸ் பியூன் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தமட்டில் ஆபிஸ் அசிஸ்டென்ட்/கிளர்க் பணிக்கு 2 பேர், ரிஷப்ஷனிஸ்ட் கம்ப் டேட்டா ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்) பணிக்கு ஒருவர், ஆபிஸ் பணிக்கு ஒருவர் என மொத்தம் 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கிருஷ்ணகிரி-தர்மபுரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆபிஸ் பியூன் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் ஆபிஸ் அசிஸ்டென்ட்/ கிளர்க் பணிக்கு 2 பேர், ரிஷப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்), ஆபிஸ் பியூன் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் ஆபிஸ் அசிஸ்டென்ட்/ கிளர்க் பணிக்கு 2 பேர், ரிஷப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ஆபிஸ் பியூன் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன: ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் கம்யூட்டர் அறிவு பெற்றிருப்பதோடு நிமிடத்துக்கு 40 எழுத்துகள் டைப் செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும். ரிசப்ஷன் கம் டேட்டா என்ட்ரி பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்திருப்பதோடு, நல்ல உரையாடல் திறன் கொண்டிருக்க வேண்டும். டெலிபோன், பேக்ஸ் கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும். அதோடு டைப்பிங் திறமையும் இருக்க வேண்டும். ஆபிஸ் பியூன் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 8 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

மாதசம்பளம் என்ன: இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு தாங்கள் பணியாற்றும் நகரை பொறுத்து சம்பளம் வழங்கப்படும். ஆபிஸ் அசிஸ்டென்ட்/கிளர்க், ரிசப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். ஆபிஸ் பியூன் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.14 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

நாளை கடைசி நாள்: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 16ம் தேதி(நாளை) மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்பும்போது படிப்பு சான்றிதழ்களுடன், பிற ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் செசன்ஸ் நீதிபதியின் தலைமையிலான குழுவினரால் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மாவட்ட வாரியாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்குகளில் உள்ளது.

கோவை பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

திருப்பூர் மாவட்ட பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

திருப்பூர் மாவட்ட பணிக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய Click Here

நீலகிரி மாவட்ட பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

நீலகிரி மாவட்ட பணிக்கான விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here

நாமக்கல் மாவட்ட பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

கரூர் பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

ஈரோடு பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

கிருஷ்ணகிரி பணி தொடர்பான அறிவிப்பை காண Click Here

தர்மபுரி மாவட்ட பணி தொடர்பான அறிவிப்பை காண Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+