பிளஸ் டூ முடிச்சிருக்கீங்களா.. அழைப்பு உங்களுக்குத்தான்! கடலோர காவல் படையில் வேலை.. தேதி முடியபோகுது
சென்னை: இந்திய கடலோர காவல்படையில் 260 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 27 ஆம் தேதி தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இன்றே கடைசி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இப்போது விண்ணப்பித்து கொள்ளவும்.
இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள Navik பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியானது. மொத்தம் 260 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. வயது வரம்பு என்ன? கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்: வடக்கு மண்டலத்தில் 79 பணியிடங்களும், மேற்கு மண்டலத்தில் 66 பணியிடங்களும், வடகிழக்கு மண்டலத்தில் 68 பணியிடங்களும், கிழக்கு மண்டலத்தில், 33 பணியிடங்களும், வட மேற்கு மண்டலம் - 12 பணியிடங்களும், அந்தமான் & நிக்கோபாரில் 3 பணியிடங்கள் என மொத்தம் 260 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
பணியிட விவரம்: ஜம்மு காஷ்மீர், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், சண்டிகார் ஆகியவை வடக்கு மண்டலத்தில் வருகின்றன. சத்தீஷ்கர், மகராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம், கர்நாடகா, கோவா, தாதர் & நகர் ஹவேலி, டாமன் &டையூ, லட்சத்தீவு ஆகிய பகுதிகள் மேற்கு மண்டலத்தில் வருகின்றன.
இந்திய கடலோர காவல்படையில் வேலை.. பிளஸ் 2 முடித்திருந்தால் போதும்.. மாதம் ரூ.22,000 சம்பளம்!
பீகார், மேற்குவங்காளம், ஜார்க்கண்ட், அசாம், திரிபுரா, மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து, அருணாசல பிரதேசம், மிசோரம், சிக்கிம், ஒடிஷா ஆகியவை வடகிழக்கு மண்டலத்தில் வருகின்றன. கிழக்கு மண்டலத்தில் ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, புதுவை ஆகியவை வரும்.
கல்வித்தகுதி & சம்பளம்: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணக்கு, இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளை படித்திருத்தல் அவசியம். வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 22 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.21,700 அடிப்படை சம்பளமாக வழங்கப்படும். இதனுடன் அகவிலைப்படி உள்ளிட்டவையும் உண்டு.
தேர்வு முறை: கணிணி வழி தேர்வு, உடல் தகுதி, மெடிக்கல் பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு உள்பட 4 கட்டங்களுக்கு பிறகு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதுபற்றிய விவரங்களை தேர்வு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்ப கட்ட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆர்வமும் போதுமான தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அவகாசம் 13. 02. 2024 அன்று தொடங்கியது. பின்னர் 03.03.2024 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
விண்ணப்பதார்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை https://joinindiancoastguard.cdac.in/cgept/ கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications