மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் பணிகள்.. நேர்காணல் தேதி அறிவிப்பு
மதுரை: எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மனநலம், தோல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, கண் மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கான பேராசிரியர், உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான நேர்காணலுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதி பெற்றவர்களுக்கான 3ஆம் கட்ட நேர்காணல் சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.
தென் தமிழக மக்கள் பயனடையும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மதுரை மக்கள் நீண்டகாலமாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்தார்.

மதுரை மாவட்டம் தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாகியும் ரூ.5 கோடியில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இதனால் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுவதற்கு முன்னதாகவே மாணவர் சேர்க்கை நடைபெற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2022-2023ஆம் ஆண்டுக்கான மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையும் நடந்து முடிந்துள்ளது. ஏற்கனவே 50 மாணவர்கள் படித்து வரும் நிலையில் புதிதாக சேர்ந்தவர்களையும் சேர்த்து மொத்தம் 100 மாணவர்கள் என தற்போது எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இருப்பினும், இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் காணும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை.
இதனிடையே எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மனநலம், தோல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, கண் மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கான பேராசிரியர், உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான நேர்காணலுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதி பெற்றவர்களுக்கான 3ஆம் கட்ட நேர்காணல் சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதற்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியான 63 பேரை கல்லூரி நிர்வாகம் தேர்வு செய்து, அது தொடர்பான விவரங்களை கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி வெளியிட்டது. இதனிடையே தகுதி பெற்றவர்களுக்கான 3ஆம் கட்ட நேர்காணல் சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் வரும் ஜூலை 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் என எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
எய்ம்ஸ் கல்லூரி 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என அறிவிப்புகள் வந்து கொணடுதான் இருக்கின்றன. இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள், தங்கள் கல்லூரியைக் கண்ணால் கூடக் காணமல் படித்து முடித்துச் செல்வார்கள். அவர்களின் சான்றிதழ்களில் மட்டுமே 'எய்ம்ஸ் கல்லூரியின் பெயர் இருக்கும்' எனப் பலர் விமர்சித்து வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications