"6,503" பேராமே.. அதுவும் பொங்கலுக்குள்.. தமிழக அரசு ஹேப்பி நியூஸ்.. ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு
ரேஷன் கடையில் காலியாக இருக்கும் பணியிடங்கள் பொங்கலுக்குள் நிரப்பப்படவிருக்கின்றன
சென்னை: தமிழ்நாடு ரேஷன் கடையில் காலியாக இருக்கும் பணியிடங்கள் பொங்கலுக்குள் நிரப்பப்படவிருக்கின்றன... இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கங்களின் 15-வது மாநில பேரவை திருவாரூரில் நடைபெற்றது.. இதில் மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
இதில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்... இந்நிகழ்ச்சிக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பதிவாளர் பேசியபோது, முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டார்..

காலி பணியிடம்
"தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 35 ஆயிரம் ரேஷன் கடைகளில், 33,400 ரேஷன் கடைகள் கூட்டுறவுத் துறை மூலம் இயங்குகின்றன இவற்றில் 23 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள் இப்போது விற்பனையாளர் மற்றும் உதவியாளர் காலி பணியிடங்கள் 6503 உள்ளன. இதற்கான தேர்வுக்கு இரண்டரை லட்சம் விண்ணப்பங்கள் வரப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடைபெறுவதால் நியாயமான முறையில் பணி நியமனம் நடைபெறும். வரும் நவம்பர் 14ம் தேதி வரை மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

பணி ஆணை
டிசம்பர் 15ம் தேதி முதல் 31ம் தேதி வரை தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஜனவரி முதல் வாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும்" என்று கூறியிருந்தார்... இந்நிலையில், கூட்டுறவு துறை சார்பில் ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. ரேஷன் கடை பணியிடங்கள் பொங்கலுக்குள் நிரப்பப்படும் என்று அதில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.. அச்செய்திக்குறிப்பில் உள்ளதாவது:

ரேஷன் கடைகள்
"தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 34,790 நியாய விலைக் கடைகளில் 33,487 கடைகள் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. இந்த கடைகளில் காலியாக உள்ள 5,578 விற்பனையாளர் பணியிடங்களுக்கு 2,06,641 விண்ணப்பங்களும், 925 கட்டுநர் பணியிடங்களுக்கு 23,166 விண்ணப்பங்களும் ஆக மொத்தம் 6,503 பணியிடங்களுக்கு 2,29,807 விண்ணப்பங்கள் வரப் பெற்றுள்ளன. மேற்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 13.10.2022-அன்று அனைத்து மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையங்கள் மூலமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அப்ளிகேஷன்
விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெற 14.11.2022 அன்று இறுதி நாளாகும். இந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு, 2023 பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். கூட்டுறவுச் சங்கங்களின் வரலாற்றில் முதல் முறையாக பயிர்க் கடன் அளவு ரூ.10 ஆயிரம் கோடியை தாண்டி 2021-2022-ம் ஆண்டில் 14,84,052 விவசாயிகளுக்கு ரூ.10,292.02 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை 8,44,082 விவசாயிகளுக்கு ரூ.6341.89 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.2,755.99 கோடி
1,17,617 எண்ணிக்கையிலான மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2,755.99 கோடியில் தள்ளுபடி வழங்கும் நடவடிக்கைகள் துவங்க இருக்கின்றது. கூட்டுறவுத் துறைக்கென தனி பயிற்சிக் கொள்கை வெளியிடப்பட உள்ளது. கூட்டுறவுத்துறை சார்பில் திண்டுக்கல்லில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 268 மாணவ-மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிக்கு ரூ.75.75 கோடிசெலவில் புதிய கட்டடம் கட்டுவதற்கு கூட்டுறவுத் துறை அமைச்சரால் இடம் தானமாக வழங்கப்பட்டு, விரைவில் கட்டுமானப் பணிகள் துவங்கவுள்ளன. புதிய கட்டடத்தில் 2,500 மாணவ-மாணவியர்கள் கல்வி பெற இயலும்.

808 யூனியன்
கூட்டுறவு நிறுவனங்களில் இதுவரை 808-க்கு மேற்பட்ட சங்கங்களில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டு, அதன் தொடர்ச்சியாக ரூ.365 கோடிக்கு அதிகமான சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டு, அவற்றை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொடர்புடைய சங்கங்கள் அனைத்திலும் உள்ள நிர்வாகக்குழு கலைக்கப்பட்டும், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டும், தொடர்புடைய நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் பணிகளும் முடிவடைந்துள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications