தேனி மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிக்க வரும் 27ம் தேதி கடைசி நாள்
தேனி: சட்டம் சார் தன்னார்வலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அறிவொளி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விண்ணப்பிக்க வரும் மே 27ம் தேதி கடைசி நாள் ஆகும்.
தேனி மாவட்டத்தில் சட்ட உதவி மற்றும் சட்டவிழிப்புணர்வை பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் வழங்க 50 சட்டம் சார் தன்னார்வலர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அறிவொளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பெரியகுளம், உத்தமபாளையம், போடி, ஆண்டிப்பட்டி சட்டப்பணிகள் குழுக்களில் சட்ட உதவி மற்றும் சட்டவிழிப்புணர்வை பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் வழங்க 50 சட்டம் சார் தன்னார்வலர் பணிக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் https://districts.ecourts.gov.in/dlsa-theni என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தில் பெயர், முகவரி, கல்வித்தகுதி மற்றும் பணிபுரிய விரும்பும் இடம் போன்ற விரிவான விவரங்கள் அனைத்தையும் முழுமையாக பூர்த்தி செய்து, புகைப்படம் அடங்கிய, விண்ணப்பங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து, “தலைவர்/ முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், லட்சுமிபுரம், தேனி மாவட்டம்” என்ற முகவரிக்கு தபால் மூலம் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கடைசி நாள். அன்று மாலை 5 மணிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு இதுதொடர்பான இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications