வங்கியில் அதிகாரி ஆகணுமா? டிகிரி முடிச்சவங்களுக்கு செம சான்ஸ்! இன்றே கடைசி நாள்! உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும், நபார்டு வங்கியில் காலியாக உள்ள 102 உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். எனவே தகுதியிருந்தும் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றே விண்ணப்பித்து விடுங்கள். யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், வயது வரம்பு என்ன? என்பது போன்ற விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
தேசிய விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி (NABARD) என சொல்லப்படும் நபார்டு வங்கி மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த வங்கி நாடு முழுவதும் கிளைகளுடன் இயங்கி வருகிறது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கி 1982 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்காக இந்த வங்கி உருவாக்கப்பட்டது.

இந்த வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வபோது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் 102 உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
உதவி மேலாளர் பொது - 50 பணியிடங்கள்
உதவி மேலாளர் சிஏ - 04 பணியிடங்கள்
உதவி மேலாளர் நிதி - 07 பணியிடங்கள் என மொத்தம் 102 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: பணியிடங்களுக்கு ஏற்ப கல்வி தகுதி வேறுபடும். பொது உதவி மேலாளர் பணிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதும். 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். உதவி மேலாளர் சிஏ பணிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் ஐசிஏஐ -வில் மெம்பர்ஷிப் பெற்றிருத்தல் அவசியம். நிதி (உதவி மேலாளர் பணிக்கு) பிபிஏ (பைனான்ஸ்/ நிதி), பிஎம்எஸ் உள்ளிட்ட பிரிவில் டிகிரி படிப்புகளை படித்து இருக்க வேண்டும்.
சம்பளம் & வயது வரம்பு: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.44,500 - 89,150 வரை வழங்கப்படும். வயது வரம்பை பொறுத்தவரை 01. 07. 2024 தேதிப்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது ஆகும். அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். அதாவது விண்ணப்பதாரர்கள் 02. 07. 1994 க்கு முன்பாகவோ 01. 07. 2003-க்கு பிறகோ பிறந்தவராக இருத்தல் கூடாது.
அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். அதாவது, எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு முறை: முதன்மை தேர்வு, மெயின் தேர்வு, சைக்கோமெட்ரிக் டெஸ்ட் ஆகியவை முறையில் தகுதியான விண்னப்பதாரர்கள் பணிக்க்கு தேர்வு செய்யப்படுவார்கள். கணிணி வழியிலான தேர்வு (CBT) நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும்.
தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய நகரங்களில் நடைபெறும். தேர்வு மையம் குறித்த தகவல் விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கெட்டில் தெளிவாக குறிப்பிடப்படும். தேர்வு நடைபெறும் தேதி ஆகியவை உரிய நேரத்தில் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: தகுதியும் ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரகள் இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன் கு படித்து தெரிந்து கொள்ளவும். கல்விதகுதி உள்ளிட்ட விவரங்களை தெளிவாக படித்து அறிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்ப கட்டணம் 850 ரூபாய் ஆகும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு 150 ரூபாய் விண்ணப்ப கட்டணம் ஆகும். விண்ணப்பம் தொடங்கும் தேதி 27.07.2024. விண்ணப்பிக்க கடைசி நாள் 15.08.2024 ஆகும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் மறக்காமல் உடனே விண்ணப்பித்து விடுங்கள். தேவையான தகுதி இலலத விண்ணப்பதார்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/2707240233final-advertisement-grade-a-rdbs-rajbhasha-2024.pdf கிளிக் செய்யவும்.
-
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
தூத்துக்குடியில் வேலை.. சுகாதார ஆய்வாளர், செவிலியர் என 44 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications