10, ஐடிஐ முடித்தாலே போதும்.. நாமக்கல் சுகாதாரத்துறையில் சூப்பர் வேலை.. மாதம் ரூ.40,000 வரை சம்பளம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.12 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் வரை வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் சுகாதாரத்துறையின் பல்வேறு திட்டங்களில் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை மாவட்ட வாரியாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

District Quality Cosultant பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்பணப்ம் செய்வோர் டென்டல், ஆயுஷ், சோசியல் சயின்ஸ், லைப் சயின்ஸ் படிப்புகளுடன் ஹாஸ்பிஸ்டல் அட்மினிஸ்ட்ரேஷன், பப்ளிக் ஹெல்த், பப்ளிக் மேனேஜ்மென்ட் படிப்பில் மாஸ்டர்ஸ் மடித்த 2 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
அடுத்ததாக டென்டலர் சர்ஜன் (Dental Surgeon) பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.34 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். பிடிஎஸ் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதேபோல் Refrigeration Mechanics (Immunisation) பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ஐடிஐயில் Refrigeratior Mechani and Air conditioning படிப்பை முடித்து ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதற்கு மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கபப்டும்.
மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் Mid Level Health Provider பணிக்கு 4 பேர் தேர்வு செய்யபப்ட உள்ளனர். மாதசம்பளமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும் நிலையில் டிப்ளமோ ஜிஎன்எம்/பிஎஸ்சி (நர்சிங்) முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இதற்கு அடுத்தபடியாக ஆர்பிஎஸ்கே பார்மசிஸ்ட் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கு டிப்ளமோ பார்மஸி முடித்திருக்க வேண்டும். மாதசம்பளமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.
அதோடு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஜிஆர்-II பணிக்கு 7 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிளஸ் 2-வில் உயிரியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட படிப்புகளை படித்து முடித்தவர்கள் விண்ணப்பம் யெ்யலாம். மாதசம்பளமாக ரூ.14 ஆயிரம் வழங்கப்படும். அதன்பிறகு ஏஎன்எம்-யூபிஎச்சி பணிக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதசம்பளமாக ரூ.14 ஆயிரம் வழங்கப்படும். இந்த பணிக்கு 10ம் வகுப்பு முடித்து 18 மாதத்துக்கான ஆக்சிலஜி நர்ஸ் மிட்வைப்/மல்டி பர்பஸ் ஹெல்த் வொர்க்கஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
டென்டல் அசிஸ்டென்ட் பணிக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் மாதசம்பளமாக ரூ.13,800 வழங்கப்படும். இதற்கு 10ம் வகுப்பு முடித்து உதவி டென்டல் சர்ஜனாக பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அடுத்ததாக டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். 10, பிளஸ் 2 முடித்து கம்ப்யூட்டரில் ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் மாதம் ரூ.13,500 சம்பளமாக பெறலாம்.
இதுதவிர ப்ரோகிராம் கம் அட்மினிஸ்ரேட்டிவ் அசிஸ்டென்ட் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கு மாதசம்பளமாக ரூ.12 ஆயிரம் வழங்கப்படும். இந்த பணிக்கு எம்எஸ் ஆபிஸ் முடித்து ஓராண்டு பணி அனபவம் கொண்டிருப்பவர் விண்ணப்பம் செய்யலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடைசியாக பழங்குடி நல கவுன்சிலர் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கு மாதம் ரூ.10,500 சம்பளமாக வழங்கப்படும். இந்த பணிக்கு பழங்குடியினத்தை சேர்ந்த பெண் விண்ணப்பம் செய்யலாம். இவர் 10ம் வகுப்பு முடித்திருப்பதோடு பழங்குடி மக்கள் பேசும் மொழியை சரளமாக உரையாடும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ‛‛துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்/நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், (District Health Society) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் மாவட்டம் - 637 003'' என்ற முகவரிக்கு சென்று விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து விண்ணப்பம் செய்யலாம். இல்லாவிட்டால் விண்ணப்பங்களை பெற்று கொண்டு வீட்டுக்கு சென்று பூர்த்தி செய்து ஸ்பீட் போஸ்ட் மேற்கூறிய முகவரிக்கு அனுப்பலாம். ஆனால் விண்ணப்பங்களை நவம்பர் மாதம் 27 ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here












Click it and Unblock the Notifications