மாதம் ரூ.18,500 டூ ரூ.58,600 வரை சம்பளம்! 10ம் வகுப்பு போதும்! அறநிலையத்துறையில் அசத்தலான வேலை

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நரசிம்மசுவாமி கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை சம்பளத்தில் பணியை பெற முடியும்.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ஏராளமான கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகிறது.

Namakkal Narasimhaswamy TempleNamakkal Narasimhaswamy Temple recruitment 2023 for Ticket seller vacancy recruitment 2023 for Ticket seller vacancy

அந்த வகையில் தற்போது நாமக்கல்லில் உள்ள நரசிம்ம சுவாமி கோவிலில் காலியாக உள்ள சீட்டு விற்பனையாளர் (Ticket Seller) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லத அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்விதகுதி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.18,500 சம்பவளம் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.58,600 வரை சம்பளம் கிடைக்கும். விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 45 வயது நிறைவு செய்யாதவராக இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்களின் வயது வரம்பு என்பது 01.07.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் மாதம் 12 ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கு ஆப்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதாவது பணிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ‛உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோவில், நாமக்கல் - 637 001'' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பணிக்கான விண்ணப்பங்களை www.namakkalanjaneyar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் டவுன்லோட் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நரசிம்மசாமி கோவில் அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும். பணிக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது.

விண்ணப்பங்கள் செப்டம்பர் 12ம் தேதிக்குள் அங்கு கிடைக்க வேண்டும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். குறிப்பாக விண்ணப்பம் செய்வோர் இந்து மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி சீட்டு விற்பனையாளர் பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+